தொப்பை அசிங்கமாக தொங்குகிறதா? இதை இரவில் குடியுங்கள்

Report Print Deepthi Deepthi in ஆரோக்கியம்

என்னதான் முயற்சிகள் மேற்கொண்டாலும் பெரிதாக இருக்கும் தொப்பையை குறைக்க முடியாதவர்களுக்கு, இதோ வீட்டின் சமையலையில் இருக்கும் பொருட்களை வைத்து தொப்பையை குறைக்கும் பானம் தயாரிக்கலாம்.

தேவையானவை

தேங்காய்ப்பால் - 2 கிளாஸ்

தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்

துருவி இஞ்சி - 1 ஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்

மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்

தேன் - 2 ஸ்பூன்

செய்முறை

முதலில் இரண்டு கிளாஸ் அளவு தேங்காய்ப் பாலை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதனுடன் ஒரு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும்.

இவற்றுடன் ஒரு டீஸ்ப்பூன் அளவுள்ள துருவிய இஞ்சியை சேர்க்க வேண்டும்.

பின்னர் அரை டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் ஆகியவை சேர்க்கவேண்டும்.

இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி லேசாக சூடாகி குடிக்கும் பதத்திற்கு சூடாகிவிட்டால் இறக்கி விட வேண்டும்.

சுவைக்காக இரண்டு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.

இந்த பானத்தை தினமும் இரவில் குடியுங்கள் பானை போல் இருக்கும் தொப்பை மாயமாகி விடும்.

இந்த பானம் செரிமானத்திற்கும் கொழுப்பை கரைக்கவும் பயன்படுகிறது.

இது வயிற்றில் இருக்கக்கூடிய அமிலத்தின் அளவை சீராக்கும் இதனால் துரிதமாக உணவு செரிக்கப்படும். அதோடு இது சத்துக்கள் உறிந்து கொள்ளவும் துணை புரிகிறது

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்