கரு தானாக கலைந்து விடுவதற்கான காரணம் என்ன தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடவோ, அல்லது குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்துவதற்காகவோ கருக்கலைப்பு செய்யப்படுகிறது.

இருப்பினும் சில பெண்களுக்கு மெடிக்கல் முறைப்படி கருக்கலைப்பு செய்யாமல் தாமாகவே கருக்கலைந்துவிடும்.

இத்தகைய கரு கலைப்பினை மிஸ்கேரேஜ் என்று அழைப்படுகின்றது.

இந்த கருத்தரித்த இருபது வாரங்களுக்குள் கரு தானாகவே கலைந்துவிடும்.

இதற்கான காரணம் என்ன என்று தெரியுமா?

நாற்பது வயதுக்கு மேல் கர்ப்பம் தரிப்பது.

ஏற்கெனவே மிஸ்கேரேஜ் ஏற்பட்டிருப்பது.

டயாபடீஸ், ஹைபோதைராய்டிஸம் போன்ற கேஸ்களில்.

உடல் ஹார்மோன்களில் கோளாறுகள்.

தாய்க்கு புகை, மது போன்ற பழக்கங்கள் இருந்தால்.

கருப்பையின் ஷேப் சரியாக இல்லையென்றாலும், பொதுவாக கருப்பை வீக்காக இருந்தாலும் தானாகவே கர்ப்பம் கலையலாம்.

தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், எதிர்பாராத விபத்துகளாலும் ஏற்படலாம்.

கரு கலையமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்
  • பசலைக் கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாயின் உடலில் இரத்தமானது அதிக அளவில் உற்பத்தியாவதோடு, கருவில் உள்ள சிசுவிற்கும் அதிக அளவில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும்.
  • பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரோட்டீன் சத்தானது கிடைக்கும்.
  • கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் மட்டும் உடல் இயங்காது. அந்த சத்து உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி நிறைந்து உணவுகளையும் சாப்பிட வேண்டும். இத்தகைய வைட்டமின் டி சத்து, அஸ்பாரகஸில் அதிகம் உள்ளது. மேலும் இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், காலை மயக்கமானது நீங்கும்.
  • ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்