தக்காளியை பயன்படுத்தி உடல் எடையை எப்படி குறைக்கலாம்?

Report Print Trinity in ஆரோக்கியம்

தக்காளி என்பது இந்தியர்கள் சமையலில் இன்றியமையாத ஒன்று. இந்த தக்காளி பழம் பலவகைகளில் நமக்கு பயன்பட்டு வந்திருக்கிறது.

அழகு குறிப்புகளில் இருந்து ஆரோக்கிய குறிப்புகள் வரை தக்காளியின் பயன் அற்புதமானது.

உலகில் அதிகமாக விளைய கூடிய காய்கறிகளில் இரண்டாவது அதிகமாக விளைய கூடிய காய் தக்காளி ஆகும். இதனை அடிக்கடி சாப்பிட்டு வருவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம்.

தக்காளியின் பயன்கள் அதில் நிறைந்துள்ள புரத சத்து நார்ச்சத்து மற்றும் மினரல்களால் நமக்கு தரப்படுகிறது.

இதே தக்காளி நம் உடல் எடையை எவ்வாறு குறைக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.

ஒரு சிறிய தக்காளியில் வெறும் 16 கலோரி அளவே உள்ளது. இரண்டு தக்காளிகள் சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். எனவே இரண்டு தக்காளிகள் நமக்கு அதிக எனர்ஜியைத் தருவதோடு உடலில் கொழுப்பு சேராமல் பார்த்து கொள்கிறது.

தக்காளியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவி புரிகிறது. இதில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் தக்காளியில் அதிக அளவில் உள்ளது.

மற்ற பழங்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் தக்காளி பழத்தில் குறைந்த அளவே கிளைசெமிக் உள்ளது. இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அதிகரிக்க மிக நீண்ட நேரம் எடுக்கும்.

தக்காளி சாப்பிடுவதன் மூலம் உடல்வளர்ச்சி அதிகரிக்கிறது என்றொரு ஆய்வு கூறுகிறது. அதற்காக அளவிற்கதிகமாக தக்காளிகளை எடுத்து கொள்வதன் மூலம் சீக்கிரம் உடல் வளர்ச்சி அடையும் என்று அதிகமாக எடுத்து கொள்ளாமல் அளவாக எடுத்து கொள்வது நல்லது.

இதில் உள்ள பாஸ்புரிக் அமிலம் நரம்புகளுக்கு பலம் தரும்.

இதன் மக்னேசியம் பொட்டாசியம் இரும்பு பாஸ்பரஸ் போன்றவைகள் உடல் எடையை ஆரோக்கியம் கெடாத முறையில் குறைக்க உதவுகிறது.

தவிர தக்காளியில் உள்ள லைகோபீன் எனும் நச்சு பொருள் மூலம் பக்கவாத நோய்கள் வராமல் பாதுகாத்து கொள்ள முடியும்.

இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உடலின் இளமையை பாதுகாக்கிறது.

வெண்ணெயில் உள்ளதை விட அதிக அளவு விட்டமின்கள் தக்காளியில் உள்ளதால் கண்பார்வை கோளாறுகளுக்கு தக்காளியை அதிகம் உட்கொள்வதால் பார்வை திறன் மேம்படும்.

இத்தனை நற்பலன்கள் கொண்ட தக்காளியை தினமும் பழரசம் போல அருந்தி வர உடல் எடை மிக அழகாக குறைந்து ஆரோக்கியம் ஆகலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers