சிறுநீர் கசிவு பிரச்சனைக்கான முக்கிய காரணம் இதோ

Report Print Deepthi Deepthi in ஆரோக்கியம்

சிறுநீர் கசிவு என்பது பெண்களை மனரீதியாக மிகவும் பாதிக்கின்றது. இப்பிரச்சினையால் வெளியே செல்லாமல் பல பெண்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி விடுகின்றனர்.

வயது அதிகரிக்க அதிகரிக்க இந்த பிரச்சினையும் அதிகரிக்கும். ஏற்கனவே குடும்பத்தில் யாருக்கேனும் இது இருந்தால் உங்களுக்கு இது வரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்.

பெண்களுக்கு ஏற்படும் இப்பிரச்சனைக்கான காரணங்கள் மூளை சிறுநீர்ப்பைக்கு சரியான சமிக்ஞைகளை அனுப்புவதில்லை, சிறுநீர்ப்பையின் சுருக்குத்தசைகள் தேவையான அளவு சுருங்குவதில்லை போன்றவையே ஆகும்.

இதனால் வேகமாக நடந்தாலோ, இருமல், தும்மல் போன்றவை ஏற்பட்டாலோ சிறுநீர் கசிவு ஏற்படுகிறது.

இது ’ஸ்ட்ரெஸ் இன்கான்டினென்ஸ்’(stress urinary incontinence) எனப்படும், இது சிறுநீர்ப்பையின் மேல் மிகுந்த அழுத்தம் உருவாவதால் ஏற்படுகிறது.

சிறுநீர் கசிவிற்கான இன்னொரு காரணம் பிரசவத்தின் போது, இடுப்புத் தசை வலுவிழந்து விடும். பிரசவத்திற்குப் பின், தசைகளை வலுப்படுத்துவதற்கான, ‘பெல்விக் புளோர் எக்சர்சைஸ்’ (pelvic floor exercises) செய்யச் வேண்டும்.

இந்த உடற்பயிற்சியை செய்யாவிட்டால், வயது ஆக ஆக, தசைகள் மேலும் வலுவிழக்கும். இதுதான், கசிவிற்கு மூலக் காரணம்.

’அர்ஜ் இன்கான்டினென்ஸ்’ என்பது சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற அவசரம் ஏற்பட்டு, கட்டுப்பாடில்லாமல் சிறுநீர் வெளியேறுவது.

இது சிறுநீர்ப்பையில் ஏற்படும் தசைப்பிடிப்பினால் உருவாகின்றது. சில சமயம் சிறுநீர்த் தொற்றினாலும் இது ஏற்படலாம்.

’மிக்ஸட் இன்கான்டினென்ஸ்’ மேற்சொன்ன இரண்டும் சேர்ந்து ஏற்படுவது.

’ஓவர் ப்ளோ இன்கான்டினென்ஸ்’ சிறுநீர் கழிக்கும்போது முழுமையாக சிறுநீரை வெளியேற்ற முடியாததால், சிறுநீர் சொட்டு சொட்டாக வழிந்து கொண்டேயிருக்கும் சூழலைக் குறிக்கும்.

சில மருந்துகள் உட்கொள்வதாலும், நீரிழிவு நோயினால் உண்டாகும் நரம்புத் தளர்ச்சியானாலும் இது ஏற்படுகிறது.

ஒவ்வொரு வகைக்கும் சிகிச்சை முறைகள் வேறுபடும். பொதுவாக, வாழ்க்கை முறையில் மாற்றங்கள், இடுப்புத் தசையை வலுவாக்கும் உடற்பயிற்சிகள், சிறுநீர் கழிக்கும் நேரத்தை மருத்துவர் பரிந்துரையின்படி மாற்றி சிறுநீர்ப்பையைப் பழக்கப்படுத்துதல், மருத்துவக் கருவியைப் ( யுரீத்ரல் இன்செர்ட் ) பயன்படுத்துதல், கேஃபீன் நிறைந்த டீ, காபி போன்றவற்றைக் குறைத்தல் போன்றவை பரிந்துரைக்கப்படும்.

அர்ஜ் இன்கான்டினென்ஸைக் குறைக்க ’ஆன்ட்டிகொலினெர்ஜிக்ஸ்’ எனும் மருந்து வகை உதவும். மிகத் தீவிரமான கட்டத்தில் அறுவை சிகிச்சைகூட பரிந்துரைக்கப்படும்.

பிரச்சனை பெரிதான பின், உடற்பயிற்சி மட்டும் செய்வதால், பலன் இல்லை. இடுப்புத் தசைகளுக்கு, ‘சப்போர்ட்’ செய்வதற்கு, ‘ஸ்லிங்’ (Sling) வைக்க வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers