சூடாக டீ குடிப்பவரா நீங்கள்? ஆபத்தை அறிந்து கொள்ளுங்கள்

Report Print Kabilan in ஆரோக்கியம்

மிகவும் சூடாக டீ குடிப்பதால், உணவுக்குழாய் புற்றுநோய் உண்டாகும் ஆபத்து அதிகம் என இந்திய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சூடாக டீ குடிக்கும் போது உணவுக்குழாயில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறித்து இங்கு காண்போம்.

  • வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாயானது மிகவும் மிருதுவான தன்மை கொண்டது. எனவே, இது குறிப்பிட்ட அளவு சூட்டைத் தான் தாங்கும். அந்த அளவினை விட அதிக அளவில் சூடான டீ குடிக்கும்போது, உணவுக்குழாயின் சுவர் அரிக்கத் துவங்கும்.
  • அதிக சூட்டுடன் டீ குடித்தால், உணவுக்குழாயின் சுவர்கள் பாதிக்கப்பட்டு திசுக்கள் வீக்கமடையும்.
  • உணவுக்குழாயானது அளவுக்கு அதிகமான சூட்டினை ஏற்கும்போது, புற்றுநோய் கட்டிகள் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.
  • புகையிலை பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு 1.1 மடங்கு புற்றுநோய் பாதிப்பும், பீடி புகைப்பவர்களுக்கு 1.8 மடங்கு புற்றுநோய் பாதிப்பும் ஏற்படும்.
  • அதேபோல், சிகரெட் புகைப்பவர்களுக்கு இரண்டு மடங்கு புற்றுநோய் பாதிப்பும், மது பழக்கம் உள்ளவர்களுக்கு 1.8 மடங்கு புற்றுநோய் பாதிப்பும் ஏற்படும் நிலையில், அதிக சூட்டுடன் டீ குடிப்பவர்களுக்கு இவர்களை விட, நான்கு மடங்கு அதிகமாக புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்