உங்களை அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும் காரணம் இதுதான் என்பது தெரியுமா?

Report Print Arbin Arbin in ஆரோக்கியம்

பொதுவாக ஆரோக்கியமாக இருப்பதற்கு ஒரு நாளைக்கு ஒருவர் குறைந்தது 2 லிற்றர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம் என்பது அனைவருக்கும் தெரியும்.

எப்போது 2 லிற்றர் நீரைக் குடிக்கிறோமோ, அதனால் ஒரு நாளைக்கு குறைந்தது 6-8 முறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.

ஆனால் ஒருவர் ஒரு நாளைக்கு 8-10 முறைக்கு மேல் சிறுநீர் கழிக்க நேரிட்டாலோ அல்லது இன்னும் மிகக்குறுகிய இடைவெளியில் சிறுநீர் கழித்தாலோ,

உடனே மருத்துவரை அணுகி, அவரிடம் இப்பிரச்சனை குறித்து தெரிவிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இது மிகவும் ஆபத்தான ஓர் அறிகுறியாகும்.

ஒவ்வொருவரது உடலமைப்பும் வேறுபடும். எப்படி உயரம் மற்றும் உடல் எடையில் மாற்றம் உள்ளதோ, அதேப் போல் உள்ளுறுப்புக்களின் அளவும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

பொதுவாக ஒருவரது சிறுநீர்ப்பையில் 2 கப் சிறுநீர் சேரும். எப்போது சிறுநீர்ப்பை முழுமையாக நிரம்புகிறதோ, அப்போது தான் சிறுநீர் அவரசமாக வருவது போன்ற உணர்வு எழும்.

சிலருக்கு சிறுநீர்ப்பையில் 1-1.5 கப் சிறுநீர் தான் சேரும். இத்தகையவர்களுக்கு மற்றவர்களை விட அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரும்.

எனவே அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு சிறுநீர்ப்பையின் அளவும் ஓர் காரணமாகும்.

உடலில் போதுமான அளவு நீர் இல்லாத போது, சிறுநீரின் அடர்த்தி அதிகமாகும். சிறுநீரின் அடர்த்தி அதிகம் இருக்கும் போது, அது சிறுநீர்ப்பையில் எரிச்சலை உண்டாக்கி, அவசரமாக சிறுநீர் வருவது போன்ற உணர்வு எழும்.

ஒருவருக்கு சிறுநீரக கற்கள் இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழிப்பதோடு, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடிமுதுகு பகுதி மற்றும் இடுப்பு பகுதியில் வலி போன்றவற்றையும் சந்திக்க நேரிடும்.

உயர் இரத்த அழுத்தம், சரும அலர்ஜி, மன இறுக்கம் போன்றவற்றிற்கு மாத்திரைகளை எடுப்பவர்களாயின், தற்காலிகமாக சிறுநீர்ப்பை பலவீனமாகி, அடிக்கடி சிறுநீரை கழிக்கச் செய்யும்.

இரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருந்தால், தலைச்சுற்றல், உடல் சோர்வு போன்றவற்றுடன், அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் நேரிடும்.

45 வயதிற்கு மேல் ஆன பெண்களுக்கு இறுதி மாதவிடாய் காலம் நெருங்கும். இந்த காலத்தில் பெண்கள் அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வைப் பெறுவார்கள்.

இதற்கு முக்கிய காரணம் உடலில் உள்ள ஹார்மோன்களில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால், சிறுநீர்ப்பையில் எரிச்சல் ஏற்பட்டு, அடிக்கடி சிறுநீரைக் கழிக்கச் செய்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்