விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள்

Report Print Fathima Fathima in ஆரோக்கியம்
443Shares
443Shares
ibctamil.com

ஆண்களில் பெரும்பாலான நபர்களுக்கு போதிய விந்தணு இல்லாதமைக்கு உணவுகளும், வாழ்க்கை முறையுமே காரணமாகிறது.

இதனால் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது, இதன் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

டார்க் சொக்லேட்டில் உள்ள அமினோ அமிலங்கள் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கின்றன.

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம், இதிலுள்ள ப்ரோமெலைன் எனும் நொதி விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன.

வால்நட்ஸில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன, இதிலுள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் விந்தணுவின் உற்பத்தியை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும், தரமானதாகவும் வைத்துக் கொள்ளும்.

பாலுறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் அல்லிசின் எனும் பொருள் பூண்டில் நிறைந்துள்ளது, எனவே அன்றாடம் உணவில் பூண்டை சேர்த்து வரலாம்.

கடல் சிப்பியில் விந்தணுவின் உற்பத்திக்கு வேண்டிய அத்தியாவசிய அமினோ ஆசிட்டுகள், ஜிங்க் நிறைந்துள்ளது, இதனை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வரலாம்.

தோல் நீக்கப்பட்ட மாட்டிறைச்சியில் ஜிங்க் அதிகம் நிறைந்துள்து, எனவே ஆண்கள் இதனை சேர்த்து வந்தால், விந்தணுவின் அளவு அதிகரிப்பதுடன், பாலுணர்ச்சியும் தூண்டப்படும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்