நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதனால் இவ்வளவு ஆபத்தா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

நம்மை அறியாமல் செய்யும் தவறுகளில் ஒன்று தான் நின்று கொண்டு தண்ணீரை குடிப்பது.

நம் பெரியோர்கள் தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும் என்று அடிக்கடி நம்மிடம் கூறுவதுண்டு.

ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு அதி வேகமாக செல்லும். அதனால் ஹெர்னியா ஏற்படும் என சொல்லப்படுகின்றது.

நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளை பார்ப்போம்.

  • நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும்போது நீரின் அழுத்தம் அதிகமாக இருக்கும். அதனால் அடிவயிறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும், செரிமானப் பகுதிகளுக்கும் வேகமாக செல்லும் நீர் ஜீரண பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
  • அதிக அழுத்தத்துடன் சிறுநீரகத்தை சென்றடைந்துவிடும். அதுவும் நாளடைவில் சில பாதிப்புகளை உருவாக்கலாம்.
  • அதிக அழுத்தம் கொண்ட நீரோட்டம் ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கு குறிப்பிட்ட நேரம் வரை சீரற்றதன்மையை உருவாக்கும். இதனால் மூட்டுவலி மற்றும் எலும்புகளின் இணைப்புகளில் பாதிப்பு ஏற்படக் கூடும்.
  • தொடர்ச்சியாக நின்று கொண்டே பருகினால் இதயம் மற்றும் நுரையீரல் இயக்கங்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers