உயிரணுக்களை அதிகமாக உற்பத்தி செய்யும் பூசணி இலை சூப்

Report Print Arbin Arbin in ஆரோக்கியம்

பூசணிக்காய் இலைகள் நமக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருகிறது. இந்த பூசணிக்காய் இலைகள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, புற்று நோயை தடுக்கிறது, நோயெதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது, சீரண சக்தியை மேம்படுத்துகிறது, கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது, கருவுறுதல் திறனை அதிகரித்தல் போன்ற எண்ணற்ற நன்மைகளை நமக்கு அளிக்கிறது.

இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சீக்கிரம் வயதாகுவதை தடுத்து இளமையை தக்க வைக்கிறது. எனவே நீங்கள் ரெம்ப காலம் இளமையாக இருக்க நினைத்தால் இந்த பூசணிக்காய் இலைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதில் விட்டமின் ஏ இருப்பதால் கண்களுக்கு மிகவும் நல்லது. வயதாகுவதால் ஏற்படும் கண் குறைபாட்டை தடுக்கிறது.

ஆண்களின் விந்தணுக்களின் குறைபாடு போன்றவற்றை போக்கி விந்தணுக்களின் வளத்தை அதிகரித்து குழந்தை பாக்கியத்தை கொடுக்கிறது.

இந்த பூசணிக்காய் இலையின் ஹைப்போ கிளைசெமிக் விளைவு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

இரத்தத்தில் உள்ள ஹூமோகுளோபின், எலும்பின் வலிமையை அதிகரிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இதில் அதிகளவில் கால்சியம் சத்து இருப்பதால் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் சிறந்த உணவாகும். கால்சியம் சத்தை கொடுத்து அதிகப்படியான பால் சுரக்க உதவுகிறது.

இந்த இலைகள் மற்ற இலைகளைப் போல் கசப்பதில்லை. இதை நீங்கள் சூப், சாலட் போன்றவற்றில் கூட சேர்த்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

  1. ப்ரஷ் பூசணிக்காய் இலைகள்
  2. தண்ணீர் 120 மில்லி லிட்டர்
  3. நிலக்கடலை பொடி 1 கப்
  4. நறுக்கிய தக்காளி - 2 கப்
  5. நறுக்கிய வெங்காயம் - 1 கப்
  6. பாம் ஆயில்

பயன்படுத்தும் முறை:

இலைகளை நன்றாக கழுவி சுத்தமாக நறுக்கி கொள்ளவும். அதில் கொஞ்சம் தண்ணீர், சுத்தமாக்கிய இலைகள், தக்காளி மற்றும் வெங்காயம் சேர்த்து வேக வைக்கவும்.

கடாயை ஒரு மூடிக் கொண்டு மூடி விடுங்கள். தண்ணீர் பாதியளவு வற்றியதும் அதில் நிலக்கடலை பொடி, 2 டேபிள் ஸ்பூன் பாம் ஆயில் சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் சூடுபடுத்தவும். பூசணிக்காய் சூப் ரெடி.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்