சித்தர்கள் ரகசியம் : எந்த கிழமைகள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்

Report Print Trinity in ஆரோக்கியம்

எண்ணெய் தேய்த்து குளிக்க நல்லெண்ணெய் தான் பயன்படுத்த வேண்டும்.

நல்லெண்ணெய் தான் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் கொண்டிருக்கிறது. மேலும் இதற்கு உள்காயங்களை ஆற்றும் தன்மையும் உண்டு.

எண்ணெய் தேய்த்து குளிக்க ஆரம்பிக்கும் முன் காதில் மூன்று சொட்டு எண்ணெயும், மூக்கில் இரண்டு சொட்டு எண்ணெயும், கண்களில் இரண்டு சொட்டு எண்ணெயும் விட வேண்டும். அதன் பின் உச்சியில் இருந்து ஆரம்பித்து உள்ளங்கால் வரை நல்லெண்ணய் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

காதுகளில் இரண்டு சொட்டு எண்ணெய் விடுவதன் மூலம் தலையில் வர கூடிய நோய்களும், கண்களில் இரண்டு சொட்டு விடுவதால் காதுகளில் உள்ள நோய்களும் ,தலையில் தேய்த்து குளிக்கும் போது அணைத்து நோய்களும் குணமாகும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க 60மிலி எண்ணெய் தேவைப்படும்.

எண்ணெய் தேய்த்து முடித்த உடன் உடனே குளிக்காமல் அரைமணி வரை ஊற வைத்து குளிக்க வேண்டும். அதிகாலை 6.30 மணிக்குள் குளித்தல் நல்லது.

ஆண்கள் புதன் மற்றும் சனி கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளியிலும் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.

எண்ணெய் தேய்த்து குளித்த அன்று வெயிலில் அலையாமல் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள். அன்று மதியம் தூங்க கூடாது. குளிர்பானம் போன்ற குளிர்ந்த உணவுகள் உண்ண கூடாது. கோழி ,மீன் ,செம்மறி ஆடு, நண்டு போன்றவை உண்ண உடலுறவு கூடவே கூடாது.

இப்படி முறையாக செய்துவந்தால்தான் எண்ணெய் குளியலுக்கான முழு பலனையும் பெற முடியும் என்கிறது சித்த மருத்துவம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்