தினம் 10 நிமிடம் கண்ணீர் விட்டு அழுங்க: இவ்ளோ வியாதி குணமாகுமாம்

Report Print Raju Raju in ஆரோக்கியம்

பெண்களின் கடைசி ஆயுதம் கண்ணீர் என்பது ஒரு சொல் வழக்கு!

அப்படிப்பட்ட கண்ணீர் நம் உடல்நலத்துக்கு பல்வேறு நன்மைகளை விளைவிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

அதாவது, கண்களில் என்ன பாதிப்பு வந்தாலும், உடனே, கண்களைக் காக்கவே கண்ணீர் வருகிறது. அதன்பிறகு, மருத்துவரிடம் சிகிச்சை பெற்றாலும், முதலுதவி கண்ணீர்தான்! அதிலுள்ள சத்துக்கள் கண்களைக் காத்து, நம்மையும் தரும்.

கண்ணீரானது கண்களுக்குள் நச்சுக்கிருமிகள் புகுவதைத் தடுத்து கண்களை அலசி காக்கின்றன.

கண்களின் கிருமிநாசினி என்று கண்ணீரைச் சொல்லலாம், கண்ணீரில் உள்ள கிருமிநாசினிகளே, கண்களைக் காக்கும் சக்தியாக இருக்கின்றன.

உணர்ச்சி வயப்பட்ட அழுகையில், கண்ணீருடன் மனஅழுத்தத்தைத் தூண்டும் ஹார்மோன்களும், கண்ணீரின் வழியே வெளியேறி விடுகிறதாம். இதன் காரணமாக பெண்களின் மன அழுத்தம் குறைந்து அவர்களின் உடல் நலம் வலுவாகிறதாம்.

உற்சாகமான மனநிலைகளில், சுட்டிக் குழந்தைகள் வீடுகளில் செய்யும் குறும்புகளில், நல்ல நகைச்சுவை காட்சிகளை காணுகையில் மனம் விட்டு சிரிக்கும்போது நம்மையறியாமலே, கண்ணீர் வரும்.

அந்த ஆனந்தக் கண்ணீரில், உடலை, மனதை வருத்தும் மன அழுத்தத்தைத் தூண்டும் ஹார்மோன்கள் தானாகவே வெளியேறிடும்.

அழுகையை அடக்காமல் கண்ணீரை வெளியேற்றவேண்டும் அடக்கினால், மன அழுத்தம், உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். வாய்ப்பு கிடைக்கும்போது, மனம்விட்டு கண்ணீர்வர சிரியுங்கள்!

இதனால் உடல் சமநிலையடைந்து, மனதில் அமைதியும் செயல்களில் தெளிவும் ஏற்பட்டு வாழ்க்கை சொர்கமாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers