தூக்கம் வராமல் தவிப்பவரா நீங்கள்? சின்ன வெங்காயத்தை பயன்படுத்தி பாருங்க

Report Print Santhan in ஆரோக்கியம்

சின்ன வெங்காயத்தின் சிறப்பம்சமே அதன் குளிர்ச்சி தன்மைதான். கிராமங்களில் விவசாய வேலைக்கு செல்பவர்கள் பழைய சோறுடன் சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடுவதை பார்க்கலாம்.

வெயிலில் வேலை செய்யும்போது உடல் நீர்ச்சத்தை இழக்காமல் இருக்க இது உதவுகிறது.

  • இரவில் உறக்கம் வராமல் தவிப்பர்களுக்கும், உடலில் பித்தம் அதிகமுள்ளவர்களும் சின்ன வெங்காயத்தை உணவில் சேர்க்க வேண்டும். வெங்காய சாறு எடுத்து சிறிது தண்ணீர் கலந்து குடித்து வர நன்றாக தூக்கம் நன்றாக வரும், பித்தமும் சீராக குறையும்.
  • உடல் சூடு அதிகமாகும்போது அடிவயிற்றை இழுத்து பிடித்து வலிக்கத் தொடங்கினால், சின்ன வெங்காயத்தை சாறு எடுத்து அதை அடிவயிற்றில் பற்று போட்டுக்கொண்டால் வலி சட்டென தீரும்.
  • பூச்சி வெட்டுபோல் தலை முடி மொத்தமாக உதிரத் தொடங்கினால் அந்த இடத்தில் சின்ன வெங்காயச் சாறினை தடவி வர விரைவில் அந்த இடங்களில் முடி வளரத் தொடங்கும்.
  • விந்தணு உற்பத்தி குறைவாக உள்ள ஆண்கள், உறவில் ஆர்வமில்லாதவர்கள் சின்ன வெங்காயத்தை வெண்ணெயில் வதக்கி அதில் சம அளவு தேன் சேர்த்து நன்கு கலந்து காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் வைத்து காலை, மாலை இருவேளையும் உணவுக்கு முன் சாப்பிட்டு வர விந்தணு உற்பத்தி அதிகமாகும்.
  • பெண்களின் கருப்பை கோளாறுகள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி குறைய 4 சின்ன வெங்காயம், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு, 2 வெற்றிலை, ஒரு துண்டு இஞ்சி ஆகியவற்றை அரைத்து 50 மி.லி தண்ணீரில் கலந்து குடித்து வர வேண்டும்.
  • மாதவிடாய் காலங்களில் 4 நாட்களும் தொடர்ந்து 4 மாதங்கள் குடித்து வர கருப்பை நோய்கள் குணமாகும், வலியும் குறையும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers