கடும் முதுகுவலியால் அவதியா? இதோ எளிய சித்த மருத்துவம்

Report Print Kavitha in ஆரோக்கியம்
349Shares
349Shares
lankasrimarket.com

இன்றைய காலக்கட்டத்தில் அலுவலங்களில் செல்லும் ஆண்களுக்கு பெண்களுக்கு ஒரே இடத்தில் இருந்து அமர்ந்து அதிக நீண்ட நேரம் வேலை செய்வதனால் முதுகு வலி அதிகமாக இருக்கும்.

தண்டு வடம் தசை, தசைதார், எலும்பு அதன்பிரிவு என பல அமைப்புகளை தன்னுள் கொண்டது. இதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் கூட முதுகு வலி ஏற்படலாம்.

இதனை குணப்படுத்தும் எளிய வைத்தியமுறைகளை பார்ப்போம்.

  • அமுக்கிராவை சூரணமாக செய்து ஒரு தேக்கரண்டி பாலில் கலக்கி காலை மாலை இரண்டு வேலை சாப்பிடலாம்.
  • அதிமதுரம், சுக்கு, மிளகு, மூன்றையும் சமமாக எடுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு வெந்நீரில் கலக்கி காலையில் ஒரு வேலை மட்டும் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வரலாம்.
  • ஓமம் 10 கிராம், மிளகு 10 கிராம், சுக்கு 10 கிராம், ஏலம் 20 கிராம் எடுத்து லேசாக வறுத்து எடுத்து பொடியாக செய்து (சூரணம்) அதனுடன் சம எடை கற்கண்டு சேர்த்து தினசரி இரண்டு வேலை வெந்நீரில் சாப்பிடலாம். இது வயிற்று வலியையும் குணமாக்கும்.
  • முடக்கத்தான் ஒரு பிடி அளவு எடுத்து இடித்து அதனுடன் 200 மிலி தண்ணீர் கலந்து 100 மிலி அளவாக சுண்டக்காய்ச்சி வடிகட்டி தினம் இரு வேலை சாப்பிடலாம்.
  • முதுகு வலி அதிகமாக இருப்பவர்கள் 5 மிளகு, 5 கிராம்பு மற்றும் 1 கிராம் சுக்கு சேர்த்து நீர் விட்டு தேநீர் செய்து தினமும் 2 வேளைகள் குடித்து வந்தால் முதுகு வலி குறையும்.
  • 3 கிராம் வெட்டிவேரின் புல்லை எடுத்து 2 கிராம் கற்கண்டு சேர்த்து நன்றாக அரைத்து 1 டம்ளர் பாலில் கலந்து குடித்து வந்தால் முதுகு வலி குறையும்.
  • வெற்றிலைகளை எடுத்து சாறு பிழிந்து தேங்காய் எண்ணெயில் கலந்து வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் இடுப்பு வலி மற்றும் முதுகு வலி குறையும்.
  • 5 பல் பூண்டை தோல் நீக்கி 50 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து, 20 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி முதுகு வலியுள்ள இடத்தில் 10 நிமிடம் தேய்த்தால் முதுகு வலி குறையும்.
  • சிறிது உலர்ந்த இஞ்சி பொடியுடன் இரண்டு கருப்பு மிளகு, தேவையான அளவு வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் முதுகு வலி குறையும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்