பதப்படுத்தப்பட்ட இறைச்சி உளவியலை பாதிக்குமாம்!

Report Print Givitharan Givitharan in ஆரோக்கியம்

பித்த நோயாளிகளில் நைதிரேற்று கொண்டு பதாமாக்கப்பட்ட இறைச்சி வகைகள் மிகையான இயக்கம், தூக்கமின்மை, கவனக் குறைபாடு போன்ற தாக்கங்களை கொண்டுவரலாம் என நம்பப்படுகிறது.

மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வில் பித்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள், மற்றைய மனநிலை நோயாளிகளிலும் பார்க்க மூன்று மடங்கிலும் அதிகமான அளவில் இறைச்சியை உள்ளெடுப்பது அவதானிக்கப்பட்டது.

இங்கு பல வகையான உணவு வகைகள் பரிசீலிக்கப்பட்டிருந்தது, அதில் பதப்படுத்திய இறைச்சியின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டிருந்தது.

ஆனாலும் இதன் பின்னாலுள்ள உண்மையான காரணி இதுவரையில் தெளிவாக அறியப்படவில்லை. இருப்பினும் எலிகள் மீது மேற்கொள்ளப்பட்டிருந்த சோதனையில் இது மூளையின் பிற்புறத்தொழிற்பாட்டை அதிகப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அதேநேரம் உணவுக் கால்வாய் நுண்ணுயிர்களின் தொழிற்பாட்டிலும் மாற்றங்களை அவதானிக்க முடிந்திருந்தது, இது நரம்புத் தொகுதியில் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது.

இவ் ஆய்வு 700 நோயாளிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேலும் நைத்திரேற்றானது புற்றுநோய்க்கு காரணமாகின்றது என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்