பாதாம் பால் பிரியர்களா நீங்கள்? அப்போ இதை படியுங்க

Report Print Jayapradha in ஆரோக்கியம்

இன்று பலரும் பசும்பாலுக்கு மாற்றாக பாதாம் பால் பருகி வருகின்றனர். பாதம் பால் தாவரத்திலிருந்து கிடைக்கும் பாதாம் விதையிலிருந்து தயார் செய்யப்படுகிறது.சைவ உணவினை உண்பவர்களால் பெரிதும் விரும்பின்றனர்.

பாதாம் பாலானது விட்டமின் சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளேவின்), பி3(நியாசின்), பி6(பைரிடாக்ஸின்), இ மற்றும் டி, கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து மற்றும் புரதம், கார்போஹைட்ரேட் ஆகியவையும் காணப்படுகின்றன.

பாதாம் பாலானது கொலஸ்ட்ராலையோ, லாக்டோஸையோ கொண்டிருப்பதில்லை என்பதால் லாக்டோஸ் அலர்ஜி உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கின்றது.

நலம் தரும் பாதாம் பாலின் பயன்கள்.
 • நம் எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலிமையைச் சேர்க்க கூடிய வகையில் பாதாம் பாலானது கால்சியத் தேவையில் 30 சதவீதத்தையும், நமது தினசரி விட்டமின் டி தேவையில் 25 சதவீதத்தையும் பூர்த்தி செய்து வலிமையைத் தருகின்றது.
 • ஆரோக்கியமான பன்னீர் மற்றும் பாதாம் பாலிலைக் கொண்டு சருமத்தை அலசும் போது பாதாம் பாலில் காணப்படும் விட்டமின் ஏ மற்றும் இ தேவையில் 50 இருப்பதால் சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்கின்றது.

 • பாதாம் பாலில் உள்ள விட்டமின் பி2 மற்றும் இரும்புச்சத்து ஆகியவை தசைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு அவற்றை வலுவாக்கவும் செய்கின்றன.
 • பாதாம் பாலில் கால்சியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவு குறைவாகவே உள்ளதால் சிறுநீரகப் பாதிப்படைந்தவர்கள் பாதாம் பாலினை உண்டு சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
குளுகுளு பாதாம் பால் செய்முறை.
 • பால் - 1 லிட்டர்,
 • சர்க்கரை - அரை கப்,
 • பாதாம் - ஒரு கைப்பிடி
 • முந்திரி - ஒரு கைப்பிடி
 • குங்குமப்பூ - 1 சிட்டிகை,
 • ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்.

 • பாதியளவு பாதாமை கொதிக்கும் நீரில் ஊறப் போடுங்கள். பதினைந்து நிமிடம் கழித்து நீரை வடித்துவிட்டு, தோலை உரித்து, சிறிது பால், முந்திரி சேர்த்து அரைத் தெடுங்கள்.
 • மீதியிருக்கும் பாதாமை மெல்லியதாக சீவிக் கொள்ளுங்கள்.அடுப்பில் பாலை வைத்துக் காய்ச்சுங்கள். சூடான பாலில் 2 ஸ்பூன் எடுத்து அதில் குங்குமப்பூவை போட்டு ஊற வைக்கவும்.
 • பால் பத்து நிமிடம் கொதித்ததும் பாதாம், முந்திரி விழுது, சர்க்கரை சேர்த்து, மேலும் பத்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
பாதாம் பாலை யாரெல்லாம் அருந்தகூடாது.
 • இரண்டு வயதுக்கு கீழே உள்ள பச்சிலங்குழந்தைகளுக்கு இப்பாலினைக் கொடுக்கக் கூடாது.

 • பாதாம் பாலினை அளவுக்கு அதிகமாக உண்ணும்போது தைராய்டு சுரப்பில் பாதிப்பினை உண்டாக்குகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்