கடுமையான வாய் துர்நாற்றமா? இதோ சூப்பர் டிப்ஸ்

Report Print Jayapradha in ஆரோக்கியம்
வாய் நீண்ட நேரம் வறட்சியுடன் இருந்தால் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும்.

இரவில் தூங்கும் பொழுது பற்களின் இடுக்குகளில் சிக்கிக் கொண்டுள்ள உணவுகள் பாக்டீரியாக்களை வெளியேற்ற சுரக்கப்படும் எச்சலின் சரப்பு இரவில் குறைவாக இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது ஆகிய இரண்டும் எந்நேரமும் வாய் துர்நாற்றம் வீசு காரணமாக இருக்கிறது.
குறட்டை விடும்போது வாய் திறந்தவாறு இருப்பதால் வாய் வறட்சியடைந்து அதனால் வாய் துர்நாற்றம் வீசுகிறது.
வாய் துர்நாற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?
  • உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப் பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம்.
  • சமையலில் பயன்படுத்தப் படும் கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளவதின் மூலம் வாய் துர்நாற்றம் போகும்.
  • அரை லிட்டர் நீரில் புதினா சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
  • வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம்.
  • காலையில் எழுந்தவுடன் 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.
  • காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய்க்கொப்புளிக்க வாய் துற்நாற்றம் நீங்கும்.
  • அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.
  • சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையைவாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.
  • இரவு நேர பணிபுரிபவர்கள் அதிக நேரம் பசியுடன் இருந்து வேலை நேரம் முடிந்த பிறகே உணவு எடுத்துக்கொள்வதால் வாய்துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...