கருணாநிதிக்கு வந்த உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன? அதை குறைப்பது எப்படி?

Report Print Raju Raju in ஆரோக்கியம்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை கடந்த 27-ஆம் திகதி நள்ளிரவில் திடீரென்று மோசமான நிலையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்ததை தொடர்ந்து அவரது ரத்த அழுத்தம் சீராகி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

மீண்டும் அவரது இரத்த அழுத்தம் அதிகமான நிலையில் தொடர் சிகிச்சையால் இரத்தம் அழுத்தம் சீரானது.

இரத்த அழுத்தம் என்றால் என்ன?

தமனிகளில் செல்லும் இரத்த ஓட்டத்தில் செயல்படுத்தப்படும் அழுத்தம் இதயத் துடிப்பில் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. இதுவே இரத்த அழுத்தம் (Blood Pressure) எனப்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?

உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) அல்லது இரத்தக் கொதிப்பு (Hypertension) என்பது நம் இரத்த அழுத்தம் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் அளவினை விட அதிகமாக இருப்பதே ஆகும்.

உயர் இரத்த அழுத்தத்தின் அளவு

இரத்த அழுத்தம் mmHg என்று குறிப்பிடப்படுகிறது. சராசரி இரத்த அழுத்தம் 120/80 ‍‍mmHg ஆக அல்லது 140/90 mmHg க்கு குறைவாகவே இருக்க வேண்டும்


இரத்த அழுத்தம் அதிகமானால் உடலுக்கு ஏற்படும் விளைவுகள்

இதயம் நோய் மற்றும் மாரடைப்பு

பக்கவாதம்

சிறுநீரக செயலிழப்பு

உயர் இரத்த அழுத்த நெருக்கடி

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகள்

ஆரோக்கியமான உடல் எடை பராமரித்தல்

உடற்பயிற்சி

ஆரோக்கியமான உணவுப் பழக்கம்

சோடியம் உப்பைக் குறைத்தல்

மன அழுத்தத்தைக் குறைத்தல்

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்