தினமும் நெல்லிக்காய் சாறு குடிக்கலாமா? வேண்டாமா?

Report Print Jayapradha in ஆரோக்கியம்

நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பது போலவே டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.

நெல்லிக்காய் சாறின் பயன்கள்
  • வயிற்றில் எற்படும் கோளாறுகளை முழுமையாக போக்க நெல்லிக்காயுடன் புதினா, இஞ்சி, எலுமிச்சை சேர்த்து அதனை பழச்சாறாக அருந்தலாம்.
  • அதிக உடல் எடையின் காரணமாக கஷ்டப்படுகிறவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து மெலிந்த தோற்றத்தைப் பெறலாம்.

  • தலைமுடி உதிராமல் ஆரோக்கியமான முடி வளரவும் மற்றும் இளம் வயதினருக்கு தோன்றும் நரைமுடி போன்றவைகளைத் தடுக்க தினமும் நெல்லிக்காயை உண்டு வந்தால் முற்றிலுமாக கட்டுப்படுத்தமுடியும்.
  • நெல்லிக்காயில் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் செல்கள் மிகுந்து காணப்படுவதால் இது ரத்த சோகையை குணப்படுத ஒரு சிறந்த மருந்தாக உள்ளது.
  • இரும்புச் சத்துக் குறைபாடு உடையவர்களுக்கு தேவையான விட்டமின் சி நிறைந்துள்ளது.

குறிப்பு
  • உயர் ரத்த அழுத்தப் பிரச்னை மற்றும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் நெல்லிக்காயை ஊறுகாயாக சாப்பிடக் கூடாது.
  • நெல்லிக்காய் உள்ள வைட்டமின் சி அமிலத்தன்மையை அதிகப்படுத்தும் என்பதால், அதிகளவு உட்கொள்ளும்போது நெஞ்செரிச்சல் ஏற்படும் எனவே அசிடிட்டி பிரச்னை, கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் இதை தவிர்ப்பதே நல்லது.

  • மலச்சிக்கல் மற்றும் குடல் பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வாக இருக்கும் என்றாலும் அளவுக்கதிகமாக உட்கொண்டால் மலம் கடினமாகி பிரச்னையை ஏற்படும்.
  • உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் அதிகளவு நெல்லிக்காயை ஜூஸாக அருந்தினால், உடல் வறட்சி ஏற்படலாம்.
  • நெல்லிகாய் அதிகமாகச் சாப்பிடுபவர்கள், அதிகளவு தண்ணீர் உட்கொள்ள வேண்டும். ஒருநாளைக்குக் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது அருந்துவது நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்