குடல் புண்களை குணமாக்கும் வெந்தயக் கீரை

Report Print Jayapradha in ஆரோக்கியம்

சாதாரணமாக சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை.

இதில் விட்டமின்களும், தாது உப்புகளும் மற்றும் அதிக அளவில் ஏ விட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருக்கின்றன.

இத்தகைய மருத்துவ குணம் கொண்ட வெந்தயக் கீரை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடைகின்றன.

வெந்தயக் கீரையின் நன்மைகள்
  • வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து வந்தால் இடுப்பு வலி குணமாகும்.
  • வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் உடல் சுத்தமாகும்.
  • வெந்தயக் கீரையை அரைத்துச் சூடு செய்து அதன் மீது பூசி வருவதின் மூலம் தீக்காயங்கள் குறையும்.
  • நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது, இந்தக் கீரையை தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.
  • வெந்தய கீரையை சீமை அத்திப்பழத்துடன் சேர்த்துக் கரைத்துக் கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் விரைவில் பழுத்து உடையும்.
  • வெள்ளைப் பூசணிக்காய் சாம்பாரில் வெந்தயக் கீரையைச் சேர்த்துச் சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும்.
  • வயிற்றுக் கட்டி, உடல் வீக்கம், சீதபேதி, குத்திருமல், வயிற்று வலி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers