பிரிட்ஜில் வைக்கும் தக்காளியால் இவ்வளவு ஆபத்து இருக்கா? கண்டிப்பா தெரிஞ்சுகோங்க

Report Print Santhan in ஆரோக்கியம்

எல்லா வகையான பொருட்களையும் பிரிட்ஜில் வைப்பது. இது எத்தகைய பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறியாமலே நம்மில் பலர் இதை செய்து வருகின்றோம்.

அதிலும் குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகளை பிரிட்ஜில் வைத்து உண்பதால் எண்ணற்ற நோய்கள் உடலுக்கு ஏற்படுமாம். அவ்வாறு தக்காளியை பிரிட்ஜில் வைத்து சமைத்து சாப்பிட்டால் என்ன விளைவுகள் வரும் என்பதை பார்ப்போம்.

தக்காளியின் விலை அவ்வப்போது திடீரென்று ஏறும் மற்றும் இறங்கும் என்பதால் பிரிட்ஜில் தக்காளியை பல நாட்களுக்கு பதப்படுத்தி வைக்க தொடங்கினர்.

அதுமட்டுமின்றி தக்காளியில் அதிக ஊட்டசத்துக்கள் உள்ளது. உடலின் முழு ஆரோக்கியத்திற்கும் இது நிறைய நன்மைகளை ஏற்படுத்தும்.

தக்காளியை பிரிட்ஜில் வைக்கலாமா?

தக்காளியை பிரிட்ஜில் வைத்து சமைத்து உண்டால் அதன் தன்மை முற்றிலும் மாறி சக்கைக்கு ஈடாகி விடும்.

சிலர் தக்காளியை பல நாள் அப்படியே இருக்க வேண்டும் என்பதற்காக பிரிட்ஜில் வைப்பார்கள். இது அவற்றில் உள்ள என்சைம்களில் வேதி வினை புரிந்து மாற்றி விடுகிறது.

அத்துடன் இதில் உள்ள 65 சதவீத ஊட்டசத்துக்கள் குறைந்தும் விடுகிறது. பிரிட்ஜில் வைத்த தக்காளியில் சுவை குறைந்து, மணம் இல்லாதவாறு மாறிவிடும். அதிக நாள் பிரிட்ஜில் வைத்த தக்காளியை சமைத்து சாப்பிட்டால் சில சமயங்களில் குடல் சார்ந்த பிரச்சினைகள் கூட வரலாம்.

பிரிட்ஜில் உள்ள தீமைகள்

ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே பிரிட்ஜில் பதப்படுத்த வேண்டும். எல்லா வகையான உணவுகளையும் பதப்படுத்துவதால் அது உங்கள் முழு ஆரோக்கியத்தையும் கெடுத்து உடல் உபாதைகளை தரும்.

பிரிட்ஜில் உள்ள ப்ரியான் என்ற வாயு பதப்படுத்தும் காய்கறி மற்றும் பழங்களுக்குள் ஊடுருவி அவற்றின் தன்மையை மாற்றி விடும்.

மேலும் இவற்றின் மீது ஏதேனும் கிருமிகள் ஒட்டி கொண்டு இருந்தால் அதனையும் அதிக காலம் உயிர் வாழ செய்யும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்