ஊதுபத்தி ஏற்றுவதால் ஆபத்துகள் ஏதும் உண்டா? இதை படியுங்க

Report Print Jayapradha in ஆரோக்கியம்

இறை வழிபாட்டில் முக்கியமாக பயன்படுத்தும் ஒன்று ஊதுபத்தி.

இத்தகைய ஊதுபத்தி குச்சிகளில், கந்தக டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் மற்றும் ஃபார்மல்டிஹைடை ஆக்சைடுகள் போன்றவற்றின் கலப்புகள் அதிகமாக இருப்பதால் இது நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

மலர்களின் நறுமணம் கிடைக்கும் இந்த ஊதுபத்தியில், ரசாயனப் பொருட்கள் அதிகமாக கலந்திருப்பதால் இதனால் நமது உடல் நலத்திற்கு எவ்விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை பற்றி பார்ப்போம்.


ஊதுபத்தியால் ஏற்படும் பிரச்சனைகள்

  • வீட்டில் ஊதுபத்தி பயன்படுத்துவதால், காற்றில் கார்பன் மோனாக்சைடு கலந்து இதனை நாம் சுவாசிக்கும் போது, நமது நுரையீரல் பகுதியில் அலர்ஜி மற்றும் சுவாசக் கோளாறுகள், இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

  • மிகவும் முக்கியமான ஒரு பாதிப்பு என்னவென்றால் செல்களில் அதிகரிக்கும் நச்சுத்தன்மைதான். இதனால் மரபணுக்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.

  • ஊதுபத்தியில் சுவாசமண்டலத்தை பாதிக்கும் பல பொருட்கள் உள்ளது.இந்த புகை சுவாசமண்டலத்தை விரிவடைய செய்து சுவாசக்கோளாறுகளை ஏற்படுத்துகின்றன.

  • அதிகளவு ஊதுபத்தி புகையை சுவாசிப்பதுநுரையீரலில் எரிச்சலை ஏற்படுத்தி புற்றுநோய் ஏற்பட காரணமாய் அமைகிறது.

  • அடிக்கடி ஊதுபத்தி புகையை சுவாசிப்பது ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிப்பதுடன் இருமல் மற்றும் சுவாசப்பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

  • வெகுநாட்கள் வரை இருக்கும் ஊதுபத்திகளை வைத்து இருந்து அதை பயன்படுத்துவதன் மூலம் அதிலிருந்து வரும் புகையானது, நமது மென்மையான சருமத்தோடு ஊடுருவும் போது தலைவலி, அரிப்பு மற்றும் சரும அலர்ஜிகளை ஏற்படுத்துகிறது.

  • கர்ப்பகாலத்தில் பெண்கள் ஊதுபத்தி புகையை சுவாசித்தால் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

  • தொடந்து ஊதுபத்தி புகையை சுவாசிப்பவர்களுக்கு இதயநோய் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகின்றன.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்