யாரெல்லாம் இரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடலாம் தெரியுமா?

Report Print Kabilan in ஆரோக்கியம்

இரவு உணவுக்கு பின்னர் வாழைப்பழம் சாப்பிட்டால் ஒரு சிலருக்கு நன்மைகள் தந்தாலும், பெரும்பாலானோருக்கு உடலில் கலோரி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

  • ஒரு சிலர் இரவு உணவுக்குப் பின் வாழைப்பழம் சாப்பிடும் வழக்கத்தை கொண்டுள்ளனர். வாழைப்பழத்தில் பிரக்டோஸ் என்கிற சர்க்கரை சத்து உள்ளது.
  • இது கொழுப்பாக மாறி நமது உடலில் நிரந்தரமாக தங்கி விடும் வாய்ப்பு உள்ளது. இரவில் உணவிற்கு பின்னர் வாழைப்பழம் சாப்பிடுவதால் விரைவில் செரிமானம் உண்டாகும்.
  • இதனால் காலைக்கடன் கழிப்பதில் பிரச்சனை ஏற்படாது என்றாலும், வயிற்று உபாதை காரணமாக காலைக்கடன் முடிக்க சிரமப்படுபவர்களுக்கு இது பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே இவர்கள் இரவு உணவிற்கு பின்னர் வாழைப்பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • எனினும், 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இரவில் வாழைப்பழத்தை கொடுக்கலாம். தொடர்ந்து இரவு நேரங்களில் வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு சளித்தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது.
  • விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்பவர்கள் இரவு உணவிற்கு பின் வாழைப்பழம் சாப்பிடுவது நன்மை தரும். இதனால் உடலில் கலோரி அதிகரிப்பதுடன், களைப்படையாமல் நீண்ட நேரம் உடற்பயிற்சிகள் செய்ய முடியும்.
  • இரவு உணவிற்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் பிரச்சனையை சந்திப்பவர்கள், அதற்கு பதிலாக நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • வயதானவர்களும், நீரிழிவு நோய் உள்ளவர்களும் இரவு நேரங்களில் வாழைப்பழத்தை சாப்பிடக் கூடாது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...