மஞ்சள் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள்!!

Report Print Jayapradha in ஆரோக்கியம்

வீட்டு சமையலறையில் உள்ள அதீத மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்ட பொருள் தான் மஞ்சள் தூள்.

மஞ்சள் பொடியை தேனுடன் சேர்த்து கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

 • சுத்தமான மலைத் தேன் - 100 கிராம்

 • மஞ்சள் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

 • மிளகுத் தூள் - 1 சிட்டிகை

 • எலுமிச்சை தோல் - 1 டீஸ்பூன்

 • ஆப்பிள் சீடர் வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

 • ஒரு பாத்திரத்தில் மஞ்சள் பொடி, மிளகுத் தூள் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

 • பின் அத்துடன் எலுமிச்சை தோல் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு நன்கு மூடி அதனை 2 வாரம் ஃப்ரிட்ஜில் வைத்து பின் பயன்படுத்த வேண்டும்.

எப்படி பயன்படுத்த வேண்டும்?

 • சளி, காய்ச்சல் போன்றவை அதிகமாக இருந்தால் முதல் நாள் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை 1/2 டீஸ்பூன் சாப்பிட வேண்டும். இரண்டாம் நாள் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை 1/2 டீஸ்பூன் சாப்பிட வேண்டும்.

 • மூன்றாம் நாள் மூன்று வேளை 1/2 டீஸ்பூன் சாப்பிட வேண்டும். இப்படி செய்தால், சளி, காய்ச்சல் பறந்தோடிவிடும்.

 • பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தைக் கொண்டவர்கள் தினமும் 1 ஸ்பூன் சாப்பிட்டு வருவது நல்லது.

 • சுவாச பிரச்சனைகளான ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சனைகள், மூச்சுக்குழாய் அழற்சி உள்ளவர்கள், தினமும் மூன்று வேளை 1/2 டீஸ்பூன் சாப்பிடுவது நல்லது.

 • ஒரு டம்ளர் சுடுநீரில் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் மிளகு தேன் கலவையை சேர்த்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, டீ போன்று காலை அல்லது மாலை நேரத்தில் பருகலாம்.

 • உணவுக்கு முன் எடுத்தால் தொண்டை மற்றும் நுரையீரலுக்கு நல்லது. உணவு உட்கொண்ட பின் எடுத்தால், குடல் மற்றும் சிறுநீரகங்களுக்கு நல்லது.

 • மேலும் இந்த கலவை தானாக கரையும் வரை வாயில் வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

எச்சரிக்கை

 • பித்தப்பை பிரச்சனை இருப்பவர்கள், மஞ்சளை எடுக்கக்கூடாது. ஏனெனில் மஞ்சள் பித்தப்பை தசைகளைச் சுருங்கச் செய்யும்.

 • குறைவான இரத்த அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்களும், இம்மருந்தை எடுக்கும் முன் மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்வது நல்லது. ஏனெனில் இது இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers