மூட்டு வலியை விரட்டியடிக்கும் எலுமிச்சை தோல்

Report Print Kavitha in ஆரோக்கியம்

எலுமிச்சையில் எண்ணற்ற பயன்கள் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

எலுமிச்சசையில் அதிக ஆன்டி ஆக்சிடென்ட் கொண்டது. விட்டமின் சி மற்றும் ஏ, பி6, பி1, பயோஃப்ளேவினாய்டு, பெக்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம், பொட்டாசியம், போன்றவை அடங்கியுள்ளது.

எலுமிச்சை சாறு போலவே எலுமிச்சை தோலிலும் மிக அதிக சத்துக்கள் உண்டு, காய்ச்சலை குணப்படுத்தும், ஆன்டிசெப்டிக் குணங்கள் கொண்டவை,

எலுமிச்சை பல்வேறுப்பட்ட நோய்களுக்கு அருந்தமருந்தாகுகின்றது.

அந்தவகையில் 40 வயதிற்குப் பின் வரும் மூட்டு வலியை கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்த ஆற்றல் கொண்டது.

மூட்டுகளில் இருக்கும் சுருங்கியிருக்கும் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. வலியை குறைத்து, பாதிப்பை குணப்படுத்துகிறது.

அதனை மூட்டு வலிக்கு எப்படி பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.

தேவையானவை
  • ஆலிவ் எண்ணெய்
  • எலுமிச்சை -2
  • யூகலிப்டஸ் இலை
செய்முறை

முதலில் எலுமிச்சை தோலை பொடியா துறுவிக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு மூடியுள்ள ஜாரில் எலுமிச்சை தோலை போட்டு அது மூழ்கும் அளவிற்கு ஆலிவ் எண்ணெயை ஊற்றி அதில் யூகலிப்டஸ் இலையையும் நறுக்கிப் போட்டு ஜாடியை இறுக மூடிவிடுங்கள்

அப்படியே 2 வாரங்கள் வைத்திருக்க வேண்டும், பின்னர் அது ஆயின்மென்ட் போல கெட்டியாகியிருக்கும்.

இதனை தினமும் இரவில் தூங்குவதற்கு முன் வலியுள்ள பகுதிகளில் தடவ வேண்டும். இப்படி தினமு செய்தால் வலி மறைந்துவிடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்