மார்பகப் புற்றுநோய்களைத் தோற்றுவிக்கும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி

Report Print Givitharan Givitharan in ஆரோக்கியம்

பதப்படுத்திய பேக்கன் மற்றும் சொசேச்சஸ் போன்றன பெண்களில் மார்பகப் புற்றுநோய்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.

முன்னைய ஆய்வுகள் மீது மேற்கொள்ளப்பட்டிருந்த பகுப்பாய்வொன்றிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது கிட்டத்தட்ட மில்லியன் கணக்கான பெண்களிடமிருந்து பெற்ற தரவுகள் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டிருந்தன.

இதில் பதப்படுத்திய இறைச்சி வகைகள் பெண்களில் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 9% ஆல் அதிகரிக்கும் சாத்தியப்பாடுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனமும் பதப்படுத்திய மாமிசங்களை புற்றுநோய்க்கு காரணமான உணவுகள் பட்டியலில் வகைப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் சிவப்பு மாமிசங்களும் அநேகமாக புற்றுநோய்க்கு காரணமாகலாம் என உலக சுகாதார நிறவனத்தால் பட்டியல்படுத்தப்பட்டுள்ளது.

இப் பதப்படுத்தப்பட்ட மாமிசங்கள் எவ்வாறு புற்றநோயைத் தோற்றுவிக்கின்றன என்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

இதில் முக்கியமாக பதப்படுத்தலில் பயன்படுத்தப்படும் உப்புக்கள் உணவுக் கூறிலுள்ள புரதத்துடன் தாக்கி அதை புற்றுநோய்த் தாக்கத்துக்குரிய கூறாக மாற்றுவதாக தெருவிக்கப்படுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்