இரவு தூங்குவதற்கு முன்பு இதில் ஒன்றை குடித்தால் குறட்டை வரவே வராது

Report Print Jayapradha in ஆரோக்கியம்

நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது.

இப்படி குறட்டை விட்டால் அது உடல் நலத்தைப் பாதிப்பதோடு, உங்கள் பாசமான உறவுகளில் தொல்லையை உண்டாக்கும். ஆகவே, அந்த குறட்டையை நிறுத்துவதற்கு ஒரு சில எளிய வழிகளை பின்பற்றி குறட்டையை தவிர்த்திடுங்கள்.

ஏலக்காய்

1/2 டீஸ்பூன் ஏலக்காய் பொடியை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து இரவில் தூங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன் குடித்தால் குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

மஞ்சள்

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில், 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து இந்த பாலை தினமும் இரவில் படுக்கும் முன் குடித்தால், குறட்டை பிரச்சனை நீங்கும்.

பூண்டு

பூண்டு சுவாசப் பாதையில் சளியின் தேக்கத்தை எதிர்த்துப் போராடும். மேலும் குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட 1-2 பூண்டு பற்களை சாப்பிட்டு ஒரு டம்ளர் நீரைக் குடியுங்கள்.

நெட்டில்

ஒரு டம்ளர் நீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் உலர்ந்த நெட்டில் இலைகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டிக் குடியுங்கள்.

தேன்

1 டேபிள் ஸ்பூன் தேனை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, இரவில் தூங்குவதற்கு முன் குடித்து வாருங்கள். இதனால் மெதுவாக குறட்டை பிரச்சனை குறைந்திருப்பதைக் காணலாம்.

வெந்தயம்

வெந்தயத்தை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, இரவில் படுக்கும் முன் நீருடன் விதைகளை சாப்பிடுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் குறட்டைப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

இஞ்சி டீ

கொதிக்கும் நீரில் இஞ்சியைத் தட்டிப் போட்டு இறக்கி வடிகட்டி தேன் கலந்து தினமும் இரவில் படுக்கும் முன் குடித்து வந்தால் குறட்டை பிரச்சனை குறையும்.

புதினா

ஒரு டம்ளர் நீரில் 2 துளிகள் புதினா எண்ணெய் சேர்த்து கலந்து கொண்டுபின் அந்நீரால் இரவில் தூங்கும் முன் வாயைக் கொப்பளியுங்கள்.இதனாலும் குறட்டையைத் தவிர்க்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers