இரவில் நிம்மதியாக தூங்குவது எப்படி? தூக்கம் வராதவர்கள் கட்டாயம் படிக்கவும்!

Report Print Jayapradha in ஆரோக்கியம்
320Shares
320Shares
ibctamil.com

குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்கப்பதை பழக்கமாக்கி கொண்டால் தூங்குவதற்குரிய நேரம் வந்தவுடன் நன்கு உறக்கம் வரும்.

நிம்மதியாக தூங்க செய்ய வேண்டியவை

  • தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டு விடவும். சாப்பிட்டவுடன் தூங்கினால் நள்ளிரவில் விழிப்பு வரும்.

  • உறங்க செல்வதற்கு முன்பு 4 மணி நேரத்துக்குள் டீ, காபி, மது என்று எதையும் குடிக்கக் கூடாது.

  • தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உடற்பயிற்சி செய்யக் கூடாது.படுக்க செல்வதற்கு முன்பு புகை பிடிக்கவும் கூடாது.

  • தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. தினமும் யோகா, தியானம் செய்வது நல்லது.

  • மதியம் தூங்கி பழகியவர்கள் 20 முதல் 30 நிமிடமே தூங்க வேண்டும்.மதியம் அதிக நேரம் தூங்கினால் இரவு தூக்கம் பாதிக்கும்.

  • உறவினர்களுடன், நண்பர்களுடன் பேசி, ஜாலியாக இருக்கலாம்.டிவி, கம்ப்யூட்டர், நெட், மெயில் என்று மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளலாம்.

  • தூங்கும் அறை இருட்டாகவும், வெளியில் இருந்து வெளிச்சம் உள்ளே வராமலும் இருக்க வேண்டும்.

  • தூங்குவதற்கு முன்பு மனதை அமைதியாக்கி தயார் படுத்திக் கொள்ளவும். தூங்கச் செல்லும் முன் குளிர்ந்த நீரில் உடலை கழுவலாம்.

  • பால் குடிப்பது நல்லது. அதில் உள்ள சத்துப்பொருட்கள் தூக்கத்தை வரவழைக்கும்.

  • படுக்கை அறை காற்றோட்டமாகவும், சத்தமில்லாத அமைதியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

படுக்கும் அறையில் இருக்கக் கூடாத பொருட்கள்

  • நனைந்த உடைகள், உள்ளாடைகள் படுக்கை அறையில் இருக்கக் கூடாது. படுக்கும் அறையில் இரவு பல்புகள் இருக்க வேண்டிய கட்டாயமில்லை.

  • படுக்கை அறையில் இதமான குளிர் இருப்பது அவசியம். சூடாக இருக்கக் கூடாது.படுத்தபடியே பார்க்கும் விதத்தில் சுவர் கடிகாரமோ, டிவியோ வைக்கக் கூடாது.

  • தூங்கும் அறையில் சத்தம் கூடாது. சத்தம் கேட்டபடி தூங்கினால் நல்லதல்ல. படுக்கை விரிப்புகள் சுத்தமாக இருப்பது அவசியம்.

  • தலையணை மற்றும் படுக்கைகள் மென்மையாக இருக்க வேண்டும். மல்லாந்து தூங்கும் பழக்கம் உள்ளவர்கள் தலையணையை பயன்படுத்த வேண்டாம்.

  • தூக்கம் வந்தால் மட்டுமே படுக்கையில் படுக்க வேண்டும்.உறக்கம் வரவில்லை என்றால் உடனே எழுந்து சென்று வேறு வேலைகளை பார்க்கலாம்.

  • நள்ளிரவில் அடுத்த நாள் பார்க்க வேண்டிய வேலைகளைப் பற்றி சிந்திக்காதீப்பதை தவிர்க்கவும்.

  • விடுமுறை நாட்களில் ஓய்வு என்ற பெயரில் பகலில் தூங்குவது கூடாது. படுக்கையில் உட்கார்ந்து டிவி, கம்ப்யூட்டர், லேப்டாப் பார்ப்பது கூடவே கூடாது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்