உடலில் தேங்கியுள்ள சளியை வெளியேற்ற உதவும் சில ஆயுர்வேத வழிகள்

Report Print Jayapradha in ஆரோக்கியம்

சளி பிடித்து விட்டால் சுவாசக் குழாயில் சளித்தேக்கம் அதிகரித்து மூச்சு விடுவதில் சிரமத்தை உணரக்கூடும். மேலும் இந்த சளி தேக்கத்தை இயற்கையான வழியில் வெளியேற்ற சில வழிகள் உள்ளன.

இப்படி உடலில் தேங்கும் சளியை நம் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களின் மூலம் வெளியேற்ற என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்

மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் பொருள் பாக்டீரியாக்களை எதிர்க்கும் மற்றும் உடலினுள் உள்ள தொற்றுக்கள் மற்றும் தொண்டை புண்ணை போக்கும்.

1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு கலந்து, அதை தினமும் 3-4 முறை குடித்து வர, சளி தொண்டையில் தேங்குவது குறையும்.

இஞ்சி

இஞ்சியில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகளும் நிறைந்துள்ளன.

1 டம்ளர் நீரில் இஞ்சி மற்றும் மிளகை சேர்த்து மிதமான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் தேன் கலந்து குடித்து வர சளி விரைவில் வெளியேறும்.

ஆவி பிடிப்பது

சுடுநீரில் ஆவி பிடிப்பதால், சளி மற்றும் கபம் தளர்ந்து, சுவாசக் குழாய் சுத்தமாகி சுவாச பிரச்சனைகள் நீங்கி நிம்மதியாக சுவாசிக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் சுடுநீரை ஊற்றி, அதில் மூலிகை இலைகளை போட்டு, அந்நீரால் தினமும் 3-4 முறை ஆவி பிடித்து வர, சளி விரைவில் வெளியேறிவிடும்.

தேன் மற்றும் எலுமிச்சை

தேனில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. மேலும் வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

எலுமிச்சை சாறு மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அதை தினமும் மூன்று வேளைகள் குடித்து வர, சளி மற்றும் கபம் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்