அடிக்கடி நாக்கு வறண்டு போயிடுதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக அனைவருக்கும் ஏற்படும் நோய்களில் ஒன்றுதான் வாய் உலர்ந்து போதல் அல்லது ஸேரோஸ்டோமியா (xerostomia) ஆகும்.

இது வாயில் நாள்பட்ட வறட்சியை ஏற்படுத்துகிறது. வாயை ஈரமான நிலையில் வைக்கப் போதுமான உமிழ்நீர் உற்பத்தி செய்ய முடியாத ஒரு நிலைமையேயாகும்.

நரம்பு சேதத்தால் உமிழ்நீர் சுரப்பிகளின் செயல்பட்டில் இழப்பு ஏற்படலாம். வாய் உலர்தலுக்கு இதுவும் ஒரு காரணியாகும்.

மேலும் பதற்றம் மற்றும் எரிச்சல் போன்ற சூழ்நிலைகள் கூட வாய் உலர்தலை விளைவிக்கின்றன.

காய்ச்சல் அல்லது நீரிழிவு போன்ற பிற சுகாதார நிலைகளின் விளைவாகவும் வாய் உலர்தல் ஏற்படும்.

உலர்ந்த வாய் தைராய்டு நோயின் மிகவும் பொதுவான அறிகுறியாகும்.

இதற்கு கடைகளில் விற்கப்படும் மருந்துகளை விட வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே குணப்படுத்த முடியும்.

வாய் உலர்தலுக்கு நிவாரணம் பெறக்கூடிய எளிமையான வீட்டு வைத்தியங்களை பார்ப்போம்.

தேவையானவை
  • இஞ்சி - 1
  • தண்ணீர் -1 கப்
  • தேன்
செய்முறை

ஒரு சிறிய துண்டு புதிய இஞ்சியை எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

இதை ஒரு கப் தண்ணீரில் சேர்த்து, கொதிக்க விடவும்.

இஞ்சி டீயை வடிகட்டி சுவைக்கு சிறிது தேனைச் சேர்த்து உடனடியாக உட்கொள்ளவும். மாற்றாக, நாள் முழுவதும் இஞ்சி துண்டுகளை மெல்லலாம்.

சிறந்த முடிவுகளுக்காக இந்த டீயை 2 முதல் 3 முறை தினமும் குடிக்கவும்.

குறிப்பு - இஞ்சியில் பல மருத்துவ நன்மைகள் உள்ளன. ஜிஞ்சரால் என்றழைக்கப்படும் பயோஆக்ட்டிவ் சேர்மம் உள்ளதே அதற்குக் காரணம்.

இது தவிர, இஞ்சி உமிழ்நீர் உருவாவதை ஊக்குவிக்கப்பதாக அறியப்படுகிறது.

இது நீண்ட நேரத்திற்கு உங்கள் வாயை புத்துணர்வுடன் வைத்திருக்க உதவுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்