வெறும் வயிற்றில் இந்த உணவுகள் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

Report Print Santhan in ஆரோக்கியம்

வெறும் வயிற்றில் சில உணவுகளை சாப்பிட்டால், அது உடல்நலத்திற்கு நல்லது கிடையாது என்று கேள்விபட்டிருப்போம், அதுவே வெறும் வயிற்றில் சில உணவுகளை சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?

ஓட்ஸ்

ஓட்ஸை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், குடல் மீது பாதுகாப்பு படலத்தை ஏற்படுத்தும். இதனால், ஹைட்ரோகுளோரிக் அமிலத்தால் பாதிப்பு ஏற்படாது.

மரக்கோதுமை

மரக்கோதுமை செரிமானத்தை அதிகரிக்க உதவும். இதில் புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் அதிகளவில் உள்ளது.

கோதுமை

இதில் உடலுக்கு தினமும் தேவையான வைட்டமின்-ஈயின் 15 சதவீதமும், போலிக் ஆசிட் 10 சதவீதமும் உள்ளது.

முட்டை

தினமும் காலை உணவுடன் முட்டை சாப்பிடுவதால், தினமும் எடுத்துக்கொள்ளும் கலோரியின் அளவை குறைக்க உதவும்.

தர்பூசணி

வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிடுவதால், நீர்ச்சத்து அதிகரிக்கும். தவிர, இது இதயத்துக்கும் நல்லது.

தேன்

வெறும் வயிற்றில் தேன் உடன் தண்ணீர் கலந்து குடிப்பது நச்சுக்களை வெளியேற்ற உதவும். தவிர, மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

கோதுமை புல்

கோதுமை புல்லை பவுடராக்கி, தண்ணீருடன் குடித்தால், செரிமானத்தன்மை அதிகரிக்கும், தவிர, வாயுப்பிரச்னைக்கும் சிறந்தது.

பப்பாளி

வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவது உடலை தூய்மையாக்கும். தவிர, குடல் இயக்கத்துக்கும் நல்லது.

சியா விதை

சியா விதை சாப்பிடுவது வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும். உடல் எடையை குறைக்க உதவும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்