நிரந்தரமாக உடல் எடையை குறைக்க உதவும் அற்புதமான வழிகள்!

Report Print Jayapradha in ஆரோக்கியம்

உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால் டயட் என்கிற பெயரில் உங்கள் உடல்நலன்களை கெடுத்துக்கொள்ளாமல் ஆரோக்கியமான பாதையில் வேகமாக உடல் எடையை குறைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

கறிவேப்பிலை

3-4 மாதங்களுக்கு தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்ல் 10-12 கறிவேப்பிலை இலைகளை உட்கொண்டு வர, நீங்கள் எதிர்பாராத அளவில் உங்களின் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.

இஞ்சி சாறு

இஞ்சி சாறு உடலின் மெட்டபாலிச அளவை அதிகரிக்கும். உடலில் மெட்டபாலிசத்தின் அளவு அதிகமானால், கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறையும். எனவே இஞ்சி சாற்றினை அன்றாடம் ஒரு டம்ளர் பருகி வர உடல் எடை குறையும்.

புடலங்காய்

புடலங்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால், அது உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும். அதிலும் புடலங்காய் பொரியல் செய்து, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

ஓட்ஸ்

தினசரி உணவில் ஓட்ஸ், சப்பாத்தி, பழங்கள், அதிக அளவு காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் வயிற்றை நிரப்புவதோடு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும்.

எலுமிச்சை சாறு

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடித்து வர, உடல் எடை குறைய ஆரம்பிப்பதை நன்கு உணர முடியும்.

தக்காளி

3-4 மாதங்களுக்கு தினமும் காலையில் ஒரு தக்காளியை சாப்பிட்டு வர, உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாட்டுன் இருப்பதோடு, கொழுப்புக்கள் குறைந்து, உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும்.

க்ரீன் டீ

24 மணிநேரத்தில் உடலில் இருக்கும் 72 காலரியை எரிக்கும் தன்மை கொண்டது இந்த க்ரீன் டீ. உங்கள் உடலின் இயக்கத்தை மேலும் அதிகரிக்கும் இந்த க்ரீன் டீ வருடத்திற்கு 7.3 பவுண்ட் உடல் எடையைக் குறைக்கும்.

பப்பாளிக் காய்

பப்பாளிக் காயை பருப்புடன் சேர்த்து அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர, அதுவும் உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்