கருப்பட்டியை தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா தெரிஞ்சுகோங்க

Report Print Santhan in ஆரோக்கியம்

பதநீரைக் காய்ச்சி வடிக்கும் போது கருப்பட்டி கிடைக்கிறது. இதில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.

கருப்பட்டியை தினசரி உண்பதால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து இங்கே காணலாம்.

  • உடலை சுறுசுறுப்பாக, மெருகூட்ட உதவுகிறது. பருவமடைந்த நேரத்தில் ரத்தப் போக்கை கட்டுப்படுத்துகிறது. இடுப்பு எலும்புகள், கர்ப்பப் பையை வலுப்பெறச் செய்கிறது. பருவமடைந்த பெண்களுக்கு கருப்பட்டி, உளுந்து சேர்த்து உளுத்தங்களி செய்து கொடுப்பது நல்லது.
  • சுக்குக் கருப்பட்டி உடன் சீரகத்தைச் சேர்த்து சாப்பிடலாம். இது நன்கு பசி எடுக்க உதவும். வாயுத்தொல்லை நீங்க கருப்பட்டி உடன் ஓமத்தை சேர்த்து சாப்பிடலாம்.
  • குப்பை மேனிக் கீரை உடன், கருப்பட்டி சேர்த்து வதக்க வேண்டும். இதனைச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.
  • கல்லீரல் செயல்பாட்டை சீராக்குகிறது. கல்லீரலில் தேங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சுத்தம் செய்ய உதவும். கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டி கலந்து, சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும். அடிக்கடி சிறுநீர் போவது குறையும்.
  • உடலில் சர்க்கரை அளவு கட்டுப்பாடாக இருக்க, காபியில் சீனிக்கு பதிலாக கருப்பட்டி போட்டுக் குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. ஆண்மையை வீரியப்படுத்துவதில் கருப்பட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers