தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

Report Print Jayapradha in ஆரோக்கியம்

பெண்கள் கர்ப்பக்காலத்தில் உணவில் எடுத்துகொள்ளும் அதே கவனத்தைக் குழந்தை பிறந்த பின்னரும் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஏனெனில் தாய் உண்ணும் உணவே தாய்ப்பாலாக குழந்தைக்கு வந்து சேரும். அதுவே குழந்தையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

எனவே பாலூட்டும் தாய்மார்க பால் சுரப்பை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.

பால் சுரப்பை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்?
  • பேரீச்சம், அத்தி போன்ற இரும்புச்சத்து நிறைந்த பழங்கள் தாய்ப்பாலின் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகமாக்கும்.
  • நீர்ச்சத்துகள் அதிகம் உள்ள காய்கறிகளான முள்ளங்கி, சுரைக்காய் போன்றவை பால் சுரப்பை அதிகரிக்கும்
  • மெர்க்குரி அதிகம் உள்ள சில மீன் வகைகளைத் தவிர்த்து சுறா போன்ற பால் சுரப்பைக் கூட்டும் மீன்களைச் சாப்பிடலாம்.
  • பப்பாளிக் காயின் தோலை நீக்கிவிட்டுச் சிறுசிறு துண்டுகளாக்கி லேசாக வேகவைத்துச் சாப்பிடலாம். இதில் குழந்தைக்குத் தேவையான வைட்டமின் ஏ சத்தும் அடங்கியுள்ளது.
  • வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அல்லது வெந்தயக்கஞ்சி வைத்து குடிக்க பால் சுரப்பு அதிகரிப்பதோடு, கருப்பையைச் சுருங்கச் செய்து கருப்பையின் அழுக்குகளையும் நீக்கும்.
  • நெய்யில் பூண்டை தோலுடன் நன்கு வதக்கி, பின் தோலை நீக்கி அதை சாப்பிட்டு வர தாய்ப்பால் நன்கு ஊறும்.
  • முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.
  • முளைகட்டிய பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்களை சிற்றுண்டிகளாக சாப்பிடலாம். இது தாய் மற்றும் குழந்தைக்கும் தேவையான சரிவிகித சத்துள்ள உணவாக அமையும்.
  • நார்ச்சத்து நிறைந்த கீரை வகைகள் மற்றும் காய்கறிகளான‌ கேரட், முருங்கைக்காய் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் பால் சுரப்பு சீராக இருக்கும்.
  • குழந்தைக்கு ஒவ்வொருமுறை பால் கொடுக்கும் முன்பும் சுத்தமான நீர் ஆகாரங்களை அதிகமாக குடிக்க வேண்டும். இதனால் பால் கட்டுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படாது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers