தினமும் 2 வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Report Print Jayapradha in ஆரோக்கியம்

மிகவும் சத்துக்கள் நிறைந்த பழங்களில் வாழையும் ஒன்று.

வாழைப்பழத்தில் பொட்டாசியம், ஃபைபர், மெக்னீசியம், டிரிப்டோபான், விட்டமின் B6 மற்றும் விட்டமின் B ஆகிய ஊட்டச்சத்துக்களை அதிகமாக நிறைந்துள்ளது.

இத்தனை மருத்துவ குணங்களை கொண்ட வாழைப்பழத்தை தினமும் 2 சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்.

நன்மைகள்
  • வாழைப்பழத்தை சாப்பிட்டால், பல மணிநேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள ஆர்வத்தைக் தடுக்கும்.
  • வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. அதனால் அது செரிமான மண்டலத்தை சீராக்கி, செரிமான பிரச்சனையை குறைக்கும்.
  • குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மேம்படுத்தி, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் நொதிகளையும் உற்பத்தி செய்ய உதவுகிறது.
  • வாழைப்பழத்தில் உள்ள அதிகளவிலான டயட்டரி நார்ச்சத்துக்கள், குடலியக்கத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.
  • உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் டயட்டில் வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.
  • காலையில் வாழைப்பழத்தை சாப்பிட்ட பின்பு, சுடுநீரில் எலுமிச்சை சாறு பிழிந்து குடித்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
  • ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்து, ரத்த சோகை மற்றும் ரத்த அழுத்தம் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • எலும்புகளை வலிமையாக்கி, வயிற்று அல்சர், தசை பிடிப்புகள், சிறுநீரக புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
  • தினமும் இரண்டு வாழைப்பழத்தை சாப்பிட்டுவந்தால் இரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள், முழங்கால் வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும்.
குறிப்பு
  • வாழைப்பழத்தில் அதிகளவிலான ஃபுருக்டோஸ் உள்ளது. எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் காலை உணவாக வாழைப்பழத்தை தினசரி எடுத்துக் கொள்ளலாம்.
  • ஆனால் ஏற்கனவே சர்க்கரை நோய் இருப்பவர்கள், வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது ரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரித்துவிடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers