நீங்கள் பயன்படுத்தும் நாப்கின் இதில் எத்தகையது? பெண்கள் மட்டும் பார்க்கவும்

Report Print Kavitha in ஆரோக்கியம்

முன்பெல்லாம் காட்டன் துணிகளைத்தான் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததே.

வெவ்வேறு வகைகளிலும், வடிவங்களிலும் நம்முடைய மாதவிடாய் நாட்களை எளிதில் கடக்க உதவுகின்றன இந்த நாப்கின்கள்.

தற்போது மார்க்கெட்டுகளில் கிடைப்பவை மற்றும் நமக்குத் தெரிந்தவை என்று பார்த்தால் சானிடரி நாப்பகின், டாம்பான்ஸ் இதனை தாண்டி மென்சுரல் கப் என்றும் கிடைக்கிறது. இவற்றை நாம் சரியான முறைகளில் தேர்ந்தெடுக்கதால் நாம் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகுகின்றோம்.

இதற்கு காராணம் நாம் விழிப்புணர்வினறி இவற்றை பயன்படுத்துவதே ஆகும். இதனை எவ்வாறு தவிர்ப்பது என்பதை தற்போது பார்ப்போம்.

நாப்கின்கள்

சானிடரி பேட்களை 4 முதல் 6 மணிநேர இடைவெளிக்குள் மாற்றிவிடுவது அவசியமானதாகும்.

4 மணி நேரத்திற்கு மேல் போகும்போது இந்த நாப்கின்களில் பாக்டீரியாவின் வளர்ச்சி ஆரம்பமாகிறது என்பதே முக்கிய காரணம்.

தற்பொழுது அதிகப்படியாக உறிஞ்சும் தன்மை கொண்ட நாப்கின்கள் தயாரிக்கப்படுகிறது. 12 முதல் 18 மணிநேரம் உபயோகிக்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன

இவை அதிகம் உறிஞ்சும் தன்மையை உருவாக்க அதிகப்படியாக செல்லுலோஸ் சேர்க்கப்படுகிறது.

இந்த செல்லுலோஸ் என்பது தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருள். மேலும் நாப்கின்கள் சிறந்த வெண்மை நிறத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் பிளீச்சிங் பொருளும் சேர்க்கப்படுகிறது.

இந்த செல்லுலோஸ் செடிகளில் இருந்து எடுக்கப்படுவதால், செடிகளுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் செல்லுலோஸில் சற்றே கலந்திருக்கும்.

அதேபோல் பிளீச்சிங் பொருளில் டையாக்சின் போன்ற வேதிப்பொருள் இருக்கிறது. ஆகவே அனைத்து நாப்கின்களிலும் பூச்சிக்கொல்லியும், டையாக்சினும் இருக்கும். இவை இரண்டும் நம் தோலில் பட்டுக்கொண்டே இருந்தால் தோலில் அலர்ஜி போன்றவை ஏற்படும் என்பதற்காகத்தான் குறிப்பிட்ட கால இடைவெளியில் நாப்கின் மாற்றுவது அவசியமாகும்.

இந்த நாப்கினை தொடர்ச்சியாக வைத்திருக்கும்போது அதிலுள்ள டையாக்சினால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. கருப்பை வாய் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

டாம்பான்ஸ்

உள்ளிருந்து உதிரத்தை உறிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டது.

இந்த டாம்பான்ஸ் கருப்பையின் அருகிலே இருப்பதால் சரியான கால இடைவெளியில் மாற்றவில்லை என்றால் எளிதில் நோய்த்தொற்று ஏற்படும்.

அதாவது 6 மணி நேரத்துக்கு அதிகமாக வைத்திருந்தோமானால் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் என்னும் நோய் தாக்குதலை ஏற்படுத்துகிறது.

இந்த நோய்த்தொற்று உடல் முழுவதும் பரவி, உடலில் ரத்தம் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்குமோ அதே போல் ஆக்கிவிடும். மேலும் இருதயம், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகள் செயல் இழக்க ஆரம்பித்துவிடும்.

உடனடியாக அன்டிபையோட்டிக்ஸ் கொடுத்து சரி செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்தாக முடிந்துவிடும். ஆகவே டம்பான்ஸில் அதிகப்படியான அபாயம் இருக்கிறது.

இரவு முழுவதும் டாம்பான்ஸை பிறப்புறுப்புக்குள் வைத்திருப்பது ஆபத்தானதாகும்.

கிலோத் பேட்

தற்போது கிலோத் பேட் என்று சொல்லப்படும் துணியினால் செய்யப்படும் நாப்கின்கள் கிடைக்கின்றன.

இவற்றில் சில பூச்சிக்கொல்லிகள் போடாத ஆர்கானிக் முறையில் விளைவித்த நல்ல தரமான பருத்தியினை கொண்டு தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதில் எவ்வித ரசாயனமும் சேர்க்கப்படுவதில்லை. மாறாக நல்ல பருத்தி, பல மெல்லிய அடுக்கில் மென்மையான துணிகள் கொண்டு தயாரித்து விற்பனைக்கு வந்திருக்கின்றன.

மென்சுரல் கப்

சிலிகானால் தயாரிக்கப்படும் ஒன்று. இதனை மடித்து பிறப்புறுப்பின் உள்ளே வைத்துக் கொள்ள வேண்டும். இது மாதவிடாய் காலங்களில் ரத்தத்தை வெளியிடாமல் இதனுள் சேர்த்து வைத்துக் கொள்ளும்.

மாதவிடாய் காலத்தில் ஒரு நாளைக்கு 10 முதல் 20 மில்லி ரத்தம் வெளியேறும் என்பதால், இதனை அடிக்கடி மாற்ற தேவையில்லை.

4 மணி நேரத்துக்கு ஒருமுறை, இதனை வெளியே எடுத்து, அதில் சேமிக்கப்பட்ட உதிரத்தை கொட்டி விட்டு நன்கு அலசி, பின் மீண்டும் பிறப்புறுப்பினுள் வைத்துக் கொள்ளலாம். இதனை 4 வருடங்கள் வரையும் பயன்படுத்தலாம்.

ஆர்கானிக் பேட்

இதை சில உலகத் தரம் வாய்ந்த ஆர்கானிக் பேட்கள் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. இணைய தளத்தில் மட்டுமே கிடைக்கிறது.

இது உள்ளாடையுடன் இணைத்து பின்பக்கம் பட்டன் போட்டுக்கொள்ளும் முறையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதனை தயாரித்து 3 முதல் 5 வருடங்களுக்குள் பயன்படுத்தும் வகையில் உற்பத்தி செய்கிறார்கள்.

இதில் குறைபாடு என்னவென்றால், அவரவர் உடல்வாகைப் பொறுத்து மாதவிடாய் போக்கின் அளவு மாறுபடும். சிலருக்கு அதிகப்படியாகவும், சிலருக்கு குறைவாகவும் என. அப்படி அதிகமாக இருப்பவர்களுக்கு இந்த துணி நாப்கின் சற்று பொருந்தாததாக இருக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்