இது தெரிந்தால் இனி அன்னாசிப்பழ தோலை தூக்கி எறிய மாட்டீங்க!

Report Print Kavitha in ஆரோக்கியம்

வெளிப்புறம் கடினமாக இருந்தாலும் உட்புறம் மிகவும் இனிமையான சுவை உடைய பழம் அன்னாசிப் பழம் ஆகும்.

அன்னாசிப்பழம் பல நோய்களை அடியோடு அழிக்க வல்லது. அன்னாசி வெப்ப மண்டல நாடுகளில் அதிகம் விளையும் ஒரு பழம் ஆகும்.

அன்னாசி பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் ப்ரோமெலைன், ப்ரோடீன், நார்ச்சத்து, வைட்டமின் எ, வைட்டமின் சி, பீட்டா- கரோட்டின், தையாமின், வைட்டமின் பி-5, பொட்டாசியம், கால்சியம், காப்பர், மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது.

அதை போல அன்னாசிப்பழத்தின் தோலும் பல நோய்களை தீர்க்கும் அற்புத சக்திப்படைத்தது. அவை என்ன என்ன என்பதை பார்பபோம்.

 • அன்னாசிப் பழ தோல் மற்றும் தண்டுகளில் காணப்படும் சக்தி மிகுந்த என்சைம், ப்ரோமிலைன். இந்த என்சைம் உடலில் உள்ள அழற்சியைப் போக்க உதவுகிறது.

 • காயம் ஏற்பட்ட பிறகு அல்லது அறுவை சிகிச்சைக்கு பிறகு உண்டாகும் வீக்கத்தைக் குறைக்க உகந்தது.

 • சைனஸ் பாதிப்பைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் உடலில் உள்ள பல்வேறு அழற்சியைப் போக்கவும் உதவுகிறது.

 • அன்னாசிப் பழ தோல் ஜீரணத்தை எளிதாக்க உதவுவதோடு மட்டுமில்லாமல் குடலில் உள்ள ஒட்டுண்ணிகள், மலச்சிக்கல், IBS அறிகுறிகள் ஆகியவற்றையும் எதிர்த்து போராட உதவுகின்றது.

 • அன்னாசிப் பழம் மற்றும் அதன் தோலில் இருக்கும் அதிக அளவு வைட்டமின் சி சத்து தொற்று பாதிப்புகளை எதிர்த்து போராடுகிறது மற்றும் தடுக்கிறது.

 • ப்ரோமிலைன் மற்றும் வைட்டமின் சி யின் சக்தி, கிருமிகளை எதிர்த்து போராட உதவுகிறது.

 • சளியைக் குறைக்கிறது, இருமலைக் கட்டுப்படுத்துகிறது, காயத்தை ஆற்றுகிறது, ஒட்டுமொத்த உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

 • கீல்வாதம் மற்றும் மூட்டு வலி உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வைத் தருகிறது.

 • அன்னாசிப் பழ செடியில் உள்ள பீட்டா கரோடின் மற்றும் வைட்டமின் சி சத்தின் காரணமாக கண் அழுத்த நோய் போன்ற சீரழிவு நோய்கள் தடுக்கப்படுகின்றன.

 • அன்னாசி பழத் தோலில் உயர்ந்த அளவு மாங்கனீஸ் உள்ளது. ஆகவே இந்த தோல், அழற்சியை எதிர்ப்பதுடன் கூடுதலாக, பல் ஈறுகளையும் திசுக்களையும் பாதுகாக்கிறது.

 • வாய் வழி சுகாதாரத்தில் இந்த பழத்தின் தோலில் உள்ள வைட்டமின் சி சத்தும் துவர்ப்பு தன்மையும் இணைந்து ஈறுகளை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.

 • அன்னாசிப் பழத் தோலில் உள்ள உயர்ந்த அளவு மாங்கனீஸ், வைட்டமின் சி, ப்ரோமிலைன் மற்றும் அன்டி ஆக்சிடென்ட் போன்றவை கட்டிகளை எதிர்த்து போராடி, புற்று நோய் வராமல் தடுக்க உதவுகின்றன.

 • அன்னாசிப் பழத்தில் உள்ள ப்ரோமிலைன், இரத்தம் உறைவதைத் தடுக்க உதவுகிறது.

 • அன்னாசி பழச் சாற்றில் உள்ள தாமிரம், ஆரோக்கியமான இரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது.

 • சோடியத்தின் பலத்தைக் குறைத்து, இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.

 • கருப்பையில் உள்ள அழற்சியைக் குறைத்து, கருவுறுதலுக்கான சாதகமான சூழலை உருவாக்கித் தர இந்த பழம் உதவுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்