மணிக்கணக்கில் உட்கார்ந்தே வேலை செய்வதனால் என்ன நடக்கும் தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்றைய அவசர உலகில் ஆண்களும் சரி பெண்களும் சரி தங்களது பிழைப்பிற்காக ஓயாமல் உழைத்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.

இருப்பினும் நாற்காலியை விட்டு நகராமல் அமர்ந்தே நாள் முழுக்க வேலை செய்வதால், தலையில் தொடங்கி கால் வரை நாம் நிறைய பிரச்சினைகளை சந்திக்கின்றோம். இது நமது மரணத்திற்கு வழிவகுகின்றது.

ஒரே இடத்தில் இருந்து வேலை செய்வதால் நாம் உடல் அளவில் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதை பார்ப்போம்.

  • ஒரே இடத்தில் நாற்காலியை விட்டு நகராமல் நாம் வேலை செய்துக் கொண்டிருப்பதால், உடலில் சேரும் கொழுப்பு கரைவதில்லை. இதனால் இதயத்தை சுற்றி உருவாகும் கொழுப்பு அமிலங்கள் இதய நலனை சீர்குலைக்கின்றது.
  • நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்யும் முறையானது, உடலில் ஹார்மோன் சமநிலையை கெடுக்கிறது. நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. நீண்ட நாட்கள் தொடருமாயின் கணையத்தில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
  • நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்வது மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படவும் காரணியாக இருக்கிறது.
  • நாற்காலியில் 6-7 மணிநேரம் உட்கார்ந்தே வேலை செய்வது உங்கள் இடுப்பு எலும்பை வலுவிழக்க செய்கிறது.
  • உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு சிறிய அளவு தொந்தி ஏற்பட்டாலும் தொந்தி வர ஆரம்பித்துவிடும். உட்கார்ந்தே வேலை செய்வது உங்கள் உடல் அமைப்பை மாற்றிவிடுகிறது.
  • கால்களை தொங்கவிட்டபடி மணிக்கணக்கில் வேலை செய்வதால் கால் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் சீராக செல்லாமல் தடை செய்கிறது. இதனால், கால்களில் பிடிப்பு, வலி, அசௌகரியமாக உணர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
  • உட்கார்ந்தே வேலை செய்வது உங்கள் மூளை செயல்திறனை மங்கிப்போக செய்கிறது. இது கவனத்தை குறைத்து, மூளையை துல்லையமற்று செயல்பட செய்கிறது.
  • ஒரே இடத்தில் நாற்காலியை விட்டு நகராமல் வேலை செய்துக் கொண்டிருக்கும் போது திடீரென கழுத்தை திருப்ப கூட முடியாத அளவு கடினமான வலி ஏற்படும். இதனால் "Spondylosis" எனப்படும் குணப்படுத்த முடியாத பாதிப்பு ஏற்படலாம்.
  • மணிக்கணக்கில் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் முதல் பாதிப்பு இந்த தண்டுவட வலி தான். இது தண்டுவட டிஸ்க் எலும்புகளை வலுவிழக்க செய்கிறது.
  • கணினியில் வேலை செய்யும் நபர்களுக்கு, கையை அசைக்காமல் ஒரே நிலையில், தட்டச்சுப் பலகையுடன் உறவாடும் போது இதுப் போன்ற தோள்ப்பட்டை வலி அதிகமாக ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...