இவை எல்லாம் கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று பழமொழியில் சொல்லப்படுகின்றது. அதைபோல் தான் நாம் உண்ணும் உணவு அளவிற்கு மீறி போனால் மரணத்தை உண்டாக்கிவிடும்.

குறிப்பிட்ட உணவுப் பொருள்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால் என்னென்ன பிரச்சினைகள் உண்டாகும் என்பது பற்றி நாம் இங்கே பார்க்கலாம்.

  • உணவில் பச்சரிசியை அதிகமாக எடுத்துக் கொண்டால் ரத்தசோகை உண்டாகும்.
  • வெல்லத்தை அளவுக்கு அதிகமாக விரும்பிச் சாப்பிடுபவராக இருந்தால், அது இரும்புச் சத்தை அதிகரிக்கச் செய்யும். குறிப்பிட்ட அளவைத் தாண்டுகிற பொழுது அஜீரணக் கோளாறை உண்டாக்கும்.
  • எண்ணெய் பலகாரங்கள் அதிகமாக சாப்பிடுகிறவராக இருந்தால் உங்களுடைய வயிற்றில் வலி அதிகமாகும்.
  • இஞ்சியை அதிகமாகச் சாப்பிட்டால் மென்மையான லேசான குரல் இருப்பவர்களுக்கு அது இறுகிவிடும்.
  • காலை வேளையில் பழைய சாதம் நீராகாரம் குடிப்பது மிகவும் நல்லது. ஆனால் அதேசமயம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுகிற பொழுது, அதிலுள்ள பாக்டீரியாக்களால் வயிற்றுப் பொருமல் ஏற்பட்டு கை, கால் வலி ஏற்படும்.
  • தேங்காயை அளவோடு சாப்பிட்டால் அது ஆரோக்கியம். அளவுக்கு அதிகமானால் சளி, பித்தம், வறட்டு இருமல், நெஞ்சு கரித்தல் ஆகியவை உண்டாகும்.
  • மாங்காயை அதிகமாகச் சாப்பிட்டால் வயிறு கட்டும் பிரச்சினை உண்டாகும். சளி அதிகமாகும். இடுப்பு வலி உண்டாகும். உடலில் பித்தமும் அதிகரிக்கும்.
  • உடல் சூடு உள்ளவர்கள் கோதுமையை மேலும் அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்று உப்புசம் அதிகரிக்கும். குடல் இரைச்சல் ஏற்படும். பித்தம் கூடும்.
  • பாதாமை சாப்பிடுகிற பொழுது, வாயின் சுவையானது மாறிவிடும் பித்தம் அதிகமாகிவிடும். வயிற்று மந்தமும் கூடும்.
  • முற்றிய முருங்கை முருங்கையை சாப்பிட்டால் வாயுத்தொல்லை அதிகரிக்கும். சளியும் அதிகரிக்கும்.
  • எருமைப் பால் குடித்தால் (அதிகமாகக் குடித்தால்) சிறுநீரகத்தில் கல் உண்டாகும். எருமையைப் போன்று அறிவும் மங்கிவிடும் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.
  • உடலில் கச்தி அதிகமாக இல்லாதவர்கள் மிளகை அதிகமாக சாப்பிட்டால் அதன்மூலம் உடலில் வெப்பம் அதிகரிக்கும்.
  • மிளகாயை அதிகமாகச் சாப்பிட்டால் உடலின் வெப்பம் அதிகரிக்கும். அதனால் உடலில் சளித்தொல்லையும் அதிகரிக்கும். ஆண்களுக்கு விந்து நீர்த்துப் போகும். விந்து கெடும்.
  • காபி அதிகமாகக் குடித்தால் பித்தம் அதிகரிக்கும். அதன்மூலம் கை, கால் நடுங்கும். நரம்புத் தளர்ச்சி ஏற்படும். கண்ணெரிச்சல் அதிகரிக்கும்.
  • டீயை அதிகமாகக் குடித்தால் உடல் நடுக்கம் உண்டாகும். காய்ச்சல், வீக்கம், பசியின்மை ஆகியவை உண்டாகும். ஆண்களுக்கு விந்துவின் வீரியம் குறையும்.
  • எலுமிச்சை கொழுப்பை குறைப்பது முதல் ஏராளமான நன்மைகளைத் தரும் என்றாலும் அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் இதயம் பலவீனப்படும்.
  • உப்பின் அளவு அதிகமானால் யூரிக் அமிலம் அதிகரிக்கும். மூட்டு பிரச்சினை உண்டாகும் சிறுநீரகக் குழாய் பிரச்சினை ஏற்படும். உயிர் விந்தணுக்களைக் குறைத்து விடும்.
  • வெங்காயத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் தலைவலி அதிகரிக்கும். மந்தத் தன்மையை உண்டாக்கும். சளி பெருக்கம் ஏற்படும்.
  • குங்குமப்பூ தேவையற்ற சமயங்களில் அதை அதிகமாகச் சாப்பிடுகிற பொழுது, அது புத்திக்கூர்மையைச் சிதைக்கும். ரத்த சிவப்பணுக்கள் குறையும். அதன் அளவு கொஞ்சமேனும் கூடினால் அழகு கூடுவதற்கு பதிலாக அழகு கெட ஆரம்பிக்கும். ரத்தம் வெளிறிப் போகும். வயிற்றில் உள்ள குழந்தையின் உடல் உறுப்புகள் கோணலாகும் வாய்ப்பு உண்டாகும்.
  • வாயுத் தொல்லையைத் தீர்க்கின்ற பூண்டு அதிகமாக எடுத்துக் கொள்ளுகின்ற பொழுது ரத்தத்தைத் வேகமாகப் பரவச் செய்து கொதிக்க வைக்கும். அது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். பெண்களுக்கு வயிற்றில் கரு இருந்தால் அது அழியும் வாய்ப்புண்டு. குடலை எரியச் செய்யும். ஆண் தன்மை இழக்க ஆரம்பிக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers