தொப்பையை 2 வாரத்திலே குறைக்க இந்த டீ ஒன்றே போதுமே!

Report Print Kavitha in ஆரோக்கியம்

தொப்பை பிரச்சினையால் பாதிக்கப்படும் பலருக்கு இந்த கருப்பு ஏலக்காய் சிறந்த ஒரு பொருளாக கருதப்படுகின்றது.

இது இந்திய உணவு வகைகளில் பெரிதும் பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி மசாலா பொருட்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது.

இது இதய நோய்கள், குடல் சார்ந்த பிரச்சனைகள், சுவாச மண்டல பிரச்சினைகள், ஆஸ்துமா தொப்பை பிரச்சினை போன்றவற்றிற்கு உதவுகிறது.

இது பலரும் வாசனைக்காக பயன்படுத்தி வருகின்றார்கள். உண்மையில் இது தொப்பை பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக அமைகின்றது.

இந்த கருப்பு ஏலக்காயை வேறு சில மூலிகை பொருட்களோடு சேர்த்து டீ போன்று தயாரித்து குடித்தால் தொப்பை பிரச்சனைக்கு நிரந்த தீர்வை தருகின்றது. தற்போது இந்த டீயினை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • கருப்பு ஏலக்காய்- 2
  • இஞ்சி பொடி - 1/2 ஸ்பூன்
  • வெந்தய பொடி - 1/2 ஸ்பூன்
  • தேன் - 1 ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
செய்முறை

முதலில் 1 கிளாஸ் நீரை கொதிக்க விட்டு, அதன் பின் கருப்பு ஏலக்காயை பொடியை செய்து போடவும்.

அடுத்து இவற்றுடன் இஞ்சி பொடி, வெந்தய பொடி, ஆகியவற்றையும் சேர்த்து மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும்.

பின்னர் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

இவ்வாறு குடிப்பதால் 2 வாரத்தில் தொப்பை காணமால் போய்விடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers