படர்தாமரைக்கான சில எளிய இயற்கை கை வைத்தியங்கள்

Report Print Kavitha in ஆரோக்கியம்

உடலில் வட்டமாக, திட்டுத்திட்டாக காணப்படும் படர்தாமரை தோலில் அரிப்பு, சிவந்த தன்மையையும் வலியையும் கொடுக்க கூடியது.

இந்த படர்தாமரை சருமம், நகம், ஸ்கால்ப், உள்ளங்கை அல்லது பாதங்களில் தான் அதிகம் ஏற்படும். இந்த நிலை முற்றினால், அது கடுமையான அரிப்புகளை ஏற்படுத்தும்.

இதற்காக பல க்ரீம்கள், ஆயின்மெண்ட் போன்றவை கடைகளில் விற்கப்படுகிறது. இருப்பினும் இயற்கை மருத்துவங்கள் கையாளுவதே சிறந்தாகும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • பூண்டை அரைத்து சாறு எடுத்து, அதனை படர்தாமரை உள்ள இடங்களில் தடவி வர வேண்டும்.
  • படர்தாமரை இருந்தால், அவ்விடத்தில் தேங்காய் எண்ணெயை தொடர்ந்து தடவி வர, படர்தாமரை நீங்குவதோடு, அது பரவுவதும் தடுக்கப்படும்.
  • ஆப்பிள் சீடர் வினிகரில் பூஞ்சை காளான் எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ளது. இதனால் இவற்றைக் கொண்டு படர்தாமரைக்கு விரைவில் நிவாரணம் காணலாம்.
  • கற்பூரத்திலும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ளதால் படர்தாமரைக்கு நல்ல தீர்வை தருகின்றது.
  • கடுகு அல்லது அதன் எண்ணெயை தினமும் படர்தாமரை உள்ள இடத்தில் தடவி வந்தால், படர்தாமரை மறையும்.
  • உப்பை வினிகருடன் சேர்த்து கலந்து, படர்தாமரை உள்ள இடத்தில் தடவி வந்தால், நாளடைவில் படர்தாமரை மறைவதைக் காணலாம்.
  • ஆவில் எண்ணெயை படர்தாமரையின் மீது தடவி வர, விரைவில் அது போய்விடும்.
  • மஞ்சள் தூளை படர்தாமரை உள்ள இடத்தில் தினமும் தடவி வந்தால், படர்தாமரை நீங்கும்.
  • பச்சை பப்பாளியை அரைத்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி வர வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்