மாதவிடாய் காலங்களில் இந்த அற்புத பானத்தை குடிச்சாலே போதும்

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக, மாதவிடாய்க் காலங்களில் வலியும், சோர்வும் வருவது இயற்கையே என்றாலும், இன்றைய உலகில் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகளும், பணிக்குச் செல்லும் பெண்களுமே, அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

காய கற்ப மூலிகைகளில் சித்தர்கள் முதலில் குறிப்பிடுவது கடுக்காய் ஆகும். இது பெண்களுக்கு ஏற்படும் மாதாவிலக்கு வலியை குறைக்க உதவுகின்றது. தற்போது மாத விடாய்க் கோளாறை கடுக்காயை வைத்து எப்படி சரி செய்வது எவ்வாறு எனப் பார்க்கலாம்

தேவையானவை
  • கடுக்காய்
  • இலவங்கப்பட்டை
  • தண்ணீர்
செய்முறை

கொட்டை நீக்கிய கடுக்காய்த் தோல்கள் உள்ளங்கையில் பாதியளவு எடுத்துக் கொண்டு, அத்துடன் இரண்டு டம்ளர் நீரை ஊற்றிக் கொதிக்க விடவும்.

அத்துடன் சிறிது இலவங்கப் பட்டையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றி ஒரு டம்ளர் என்ற அளவில் வரும்போது, வடிகட்டி பருகி வர, மாதாந்திர வலிகள் எல்லாம் ஓடி விடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்