இரத்த குழாயில் ஏற்படும் அடைப்பை தடுக்க வேண்டுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் உள்ளன. இதனால் நம் பல உடல் ரீதியான பல நோய்களை சந்திக்கின்றோம்.

இந்த அதிகபடியான கொழுப்புக்கள் இதயத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தை செலுத்தும் இரத்த குழாயான தமனியில் சுவர்களில் மெதுவாக படிய ஆரம்பித்து, நாளடைவில் அடைப்பை ஏற்படுத்தும்.

இப்படி தமனிகளில் அடைப்பு ஏற்பட்டால், அதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புக்கள் கூட அதிகம் உள்ளது.

சிலருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், பெருந்தமனி தடிப்புக்கள் ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகம் உள்ளது.

ஏனெனில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் தமனிகள் கடினமாவதால், பெருந்தமனிகளில் அடைப்புக்கள் வேகமாக ஏற்படும்

இதனை தடுக்க மருந்துகளை உபயோகிக்கமால் தினமும் மூன்று டம்ளர் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஜூஸை குடித்து வருவதன் மூலமும் பெருந்தமனி தடிப்பு ஏற்படும் அபாயத்தைத் தடுக்கலாம். தற்போது அதனை எப்படி தயாரிப்பது என்று பார்பபோம்.

தேவையான பொருட்கள்
  • துருவிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
  • மிளகு - 1/2 டீஸ்பூன்
  • தக்காளி ஜூஸ் - 1 கப்
  • எலுமிச்சை ஜூஸ் - 1/4 கப்
  • செலரி - 2 கொத்து
செய்முறை

முதலில் செலரி கீரை மற்றும் அதன் தண்டுகளை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போடவும்.

பின் அத்துடன் மீதமுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை டம்ளரில் ஊற்றி குடிக்கவும்.

இந்த ஜூஸ் குடிப்பதால் இதய நோய்கள் வராமல் இருக்கும் என்று சொல்வதை நம்ப முடியாது தான். ஆனால் மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, இந்த ஜூஸை தினமும் 3 டம்ளர் குடித்து வந்து பாருங்கள்.

இந்த ஜூஸை மூன்று வேளை உணவு உண்ட பின் எடுத்து வாருங்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்