தீராத தலைவலியால் பெரும் அவதியா? இதில் ஒன்றை ட்ரை பண்ணுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக நாம் அனைவரும் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் தீராத தலைவலி.

தலைவலி வந்தாலே எந்த வேலையையும் செய்ய முடியமால் நம் முடக்கி விடுகின்றது.

பெரும்பாலும் தலைவலி அதிகமான வேலைப்பளு, டென்ஷன், தீராத மன அழுத்தம், தலைக்குக் குளித்துவிட்டு சரியாகத் துவட்டாமல் அப்படியே ஈரத்தோடு போவது, அதனால் தலையில் நீர் கோர்ப்பது போன்ற காரணங்களால் தான் உண்டாகின்றது.

தலைவலிக்கு மருந்து எடுத்துக் கொள்வதென்றால், அலோபதியை விட நம்முடைய முன்னோர்கள் இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி தலைவலியை குணப்படுத்தியிருக்கின்றனர்.

தற்போது இந்த தீரா தலைவலியை எப்படி வீட்டுபொருட்களை கொண்டு சரி செய்யலாம் என பார்ப்போம்.

  • முள்ளங்கி நீர்ச்சத்து மிகுந்த பொட்டாசியம் நிறைந்த காய்கறிகளில் ஒன்று. ஒரு முள்ளங்கியை எடுத்து சாறு பிழிந்து அந்த ஜூஸைத் தொடர்ந்து குடித்து வாருங்கள். தீராத தலைவலியும் தீர்ந்து போகும்.

  • கொதிக்க வைத்த தண்ணீரில் மூன்று ஸ்பூன் காபி பொடியைப் போடுங்கள். பெட்ஷீட் போட்டு மூடி 20 நிமிடங்கள் வரையிலும் ஆவி பிடியுங்கள். தலைவலி இருக்கிற இடம் தெரியாமல் பறந்து போய்விடும்.

  • 4 வெற்றிலையை எடுத்து நன்கு இடித்து சாறு எடுத்து அதில் இரண்டு கற்பூரத்தையும் சேர்த்து நன்கு குழைத்து நெற்றியில் பற்று போடலாம். இதை பற்றுப் போட போட தலைவலி குறைய ஆரம்பிக்கும்.

  • ஒரு சிறு துண்டு இஞ்சியை எடுத்து, நன்கு தட்டி அதிலிருந்து வெளிவரும் சாறினை வலியுள்ள இடத்தில் தேய்த்தால் தலைவலி குறைய ஆரம்பிக்கும்.

  • கடுகை இரண்டு ஸ்பூன் எடுத்து அதை வெறும் வாணலியில் போட்டு கருகி விடாமல் வறுத்து, அந்த கடுகைத் தூள் செய்து, அதே சம அளவு அரிசி மாவையும் எடுத்து இரண்டையும் வெந்நீரில் போட்டு களி போல கிளறி, அதை நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்.

  • ஒரு ஸ்பூன் குருமிளகு எடுத்து அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து மை போல அரைத்துக் கொள்ளுங்கள். அந்த பேஸ்ட்டை எடுத்து நெற்றியில் பற்று போடுங்கள். தலைவலி அதிகமாக இருந்தால் இரவு முழுக்க வைத்திருந்து காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுங்கள்.

  • ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலை எடுத்து அதில் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை போட்டு நன்கு கலக்கி மேலும் சிறிது நேரம் சூடுபடுத்துங்கள். கொஞ்சம் வெதுவெதுப்பாக இருக்கும்போது எடுத்துக் குடியுங்கள். தலைவலி தீர்ந்து போகும்.

  • நீங்கள் தினசரி குடிக்கும் டீ அல்லது காபியில் சிறிதளவு சில துளிகள் எலுமிச்சை பழச்சாறு கலந்து, குடித்து வாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக தலைவலி குறைந்து போய்விடும்.

  • இரண்டு ஸ்பூன் கிராம்பை எடுத்துக் கொண்டு அதில் சிறிதளவு கிராம்பை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து அதை நெற்றியில் பற்று போட்டு வந்தால் தீராத தலைவலியும் கட்டுக்குள் வந்துவிடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers