உடலில் இருக்கும் சளியை விரட்ட வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்

Report Print Kavitha in ஆரோக்கியம்

மழைக்காலம் வந்து விட்டாலே போதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி ஒட்டி கொள்ளுகின்றது.

சளியில் பாக்டீரியா வைரஸ்களை, நம் உடல் கண்டு கொள்வதற்காக ஆன்டிபயாடிக், நொதிகள், புரதங்கள், பல்வேறு உயிரணுக்கள் நிறைந்து இருக்கின்றன.

சளி வந்தவுடன் நாம் அதனை வெளியேற்ற நினைக்காமல் மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு உள்ளேயே தக்க வைத்துக்கொள்கிறோம்.

இதன் காரணமாக அது அப்படியே இறுகிப்போய் கட்டியாக மாறி நுரையீரலில் படிகிறது. இதனால் உடலில் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

அதற்கு பதிலாக, சிறந்த தீர்வாக உடலில் இருக்கும் சளியை முற்றிலும் நீக்க உதவும் கைதேர்ந்த வீட்டு வைத்தியங்கள் செய்து இயற்கை முறையில் ஆரோக்கியமான பலனை பெறலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • சுக்கு.
  • மிளகு.
  • திப்பிலி.
  • தாளிசபத்திரி.
  • தேவதாரு

செய்முறை

சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி, தேவதாரு சேர்த்து நன்கு பொடி செய்துக் கொள்ளுங்கள்.

அதனுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து 1/8 லிட்டராகச் காய்ச்சி கொள்ளவும்

இந்த பானத்தை காலை, மாலை என இரண்டு வேளை குடித்து வந்தால் சளி, காய்ச்சல் குறையும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers