இந்த உணவுகளை மட்டும் ஒன்றாக சேர்த்து சாப்பிடாதீங்க.. உடலில் விஷத்தன்மை அதிகரிக்குமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

நாம் அன்றாடம் உண்ணும் ஒருசில உணவுகளை ஒருசில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடவதனால் உடலுக்குள் விஷத்தன்மை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்றது.

அதுமட்டுமின்றி ஒருசில உடல்நலக் கோளாறுகள் உள்ளவர்கள் ஒரு உணவுகளை தவிர்த்து விட வேண்டும். இப்படி எந்தெந்த உணவு காம்போக்கள் யார் யார் தவிர்க்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

 • தேனும், நெய்யும் ஒன்றாக கலந்து சாப்பிட்டால் அது விஷமாகிவிடும். எனவே இந்த இரண்டு உணவுகளையும் சேர்த்து உண்ணக்கூடாது.

 • வாழைப்பழம் சாப்பிடும் போது தயிர், மோர் சேர்த்துக் கொள்ள கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட பிறகும் உடனே இவற்றை சாப்பிடக் கூடாது.

 • பழங்களை தனியாக தான் சாப்பிட வேண்டும். சாப்பாடு சாப்பிடும் போது சேர்த்து சாப்பிட கூடாது. இதனால் பழங்களின் சத்து உடலில் ஒட்டாது.

 • காய்கறி சாப்பிடும் போது வெண்ணெய் சேர்த்துக் கொள்ள கூடாது.

 • மீன், கருவாடு சாப்பிடும் போது தயிர், மோர் சேர்த்து சாப்பிட கூடாது.

 • உடல் ஒல்லியாக இருப்பவர்கள் புழுங்கல் அரிசி சாதம் சாப்பிடக் கூடாது.

 • உடல் குண்டாக இருப்பவர்கள் கோதுமை உணவு அதிகம் சாப்பிட வேண்டும்.

 • ஆஸ்துமா, சளி பிரச்சனை உள்ளவர்கள், தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி சாப்பிடக் கூடாது.

 • மூல நோய் உள்ளவர்கள் முட்டை, காரம், மாமிச உணவுகள் சாப்பிடக் கூடாது.

 • வெண்கல பாத்திரத்தில் நெய்யை வைத்து சாப்பிட பயன்படுத்த கூடாது.

 • வெறும் வயிற்றில் காபி, டீ குடிக்க கூடாது. அதற்கு முன்னரே ஒரு டம்ளர் நீராவது குடித்திருக்க வேண்டும்.

 • மஞ்சள் காமாலை மற்றும் அல்சர் உள்ளவர்கள் மிளகாய், ஊறுகாய் போன்ற காரமான உணவுகள் சாப்பிடக் கூடாது.

 • மாதவிடாய் காலங்களில் பெண்கள் கத்திரிக்காய், அன்னாசி, பப்பாளி சாப்பிடக் கூடாது.

 • சரும நோய் பிரச்சனைகள் உள்ளவர்கள் கத்திரிக்காய், புடலங்காய், வேர்கடலை, கருவாடு, மீன், காரம், புளிப்பி அதிகம் சாப்பிடக் கூடாது.

 • கோதுமையை நல்லெண்ணெய் உடன் சேர்த்து சமைத்து சாப்பிடக் கூடாது.

 • மூட்டு மற்றும் வாத நோய்கள் உள்ளவர்கள் மாமிசம், மீன், முட்டை மற்றும் கிழங்கு உணவுகள் சாப்பிடக்கூடாது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers