முகம் பளபளப்பாக மின்ன வேண்டுமா? தயிரை இப்படி பயன்படுத்தி பாருங்க அப்புறம் தெரியும்

Report Print Santhan in ஆரோக்கியம்

நாம் தினந்தோறும் நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் தயிரை எப்படியெல்லாம் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

பொடுகு

தயிருடன் வெந்தயம் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு கலவையை தயாரிக்கலாம். ஒரு கப் தயிருடன் 5 டீஸ்பூன் வெந்தய தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். இதனை தலைமுடி தேய்த்து, அரை மணி நேரம் மசாஜ் செய்து, பின்னர் ஷாம்பு அல்லது சிகைக்காய் கொண்டு வாஷ் செய்ய வேண்டும்

இது போன்று வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தாலே போதும் பொடுகு பிரச்சனை தீர்ந்து விடும்.

பளப்பளப்பாக மாற

தயிருடன் செம்பருத்தி இதழ், வேப்பிலை, ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து பயன்படுத்த வேண்டும். அதாவது 20 செம்பருத்தி இதழ்,10 வேப்பிலை மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிது தயிர் சேர்ந்து, பின்னர் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து மசாஜ் செய்து பின்னர், தலைக்கு குளிக்கலாம்.இவ்வாறு செய்து வந்தால், தலைமுடி மிகவும் மென்மையாக இருக்கும்.

கூந்தல் வளர்ச்சி மற்றும் முடி உத்திரவை தவிர்க்க

3 டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். புதினா மற்றும் கருவேப்பிலையை நன்றாக அரைத்து தலா 2 டீஸ்பூன் சேர்க்க வேண்டும். இரண்டு முட்டைகளின் வெள்ளைக் கருவையும் சேர்த்து நன்றாக பிசைந்து மயிர்க்கால்கள் வரை அழுத்தமாக தேய்த்து விட வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers