மூட்டு வலி முதல் இரத்த சோகை வரை குணப்படுத்தும் அற்புத டீ... தினமும் ஒரு டம்ளர் குடிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

தைம் எனப்படும் மூலிகை மிகவும் ஆற்றல் வாய்ந்த மற்றும் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் மூலிகையாகும்.

இதில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் இருப்பதுடன், இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றும் செயல்படுகிறது.

மேலும் இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது.

அதுமட்டுமின்றி ஸ்க்ளீரோசிஸ், லூபஸ், முடக்கு வாதம் மற்றும் ஃபைப்ரோமியால்ஜியா போன்றவற்றை சரிசெய்யும் மருந்துகளில் இந்த தைம் மூலிகை முக்கியப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

இதில் டீ போட்டு குடிப்பதனால் மூட்டுவலி முதல் முடக்குவாதம் கீழ்வாதம் இரத்த சோகை வரையினால் பல்வேறுப்பட்ட நோய்களை இந்த அற்புத டீ விரட்ட உதவுகின்றது.

தற்போது இந்த அற்புத டீயினை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையானவை
  • உலர்ந்த தைம் மூலிகை - 1 கையளவு
  • தண்ணீர் - 1 கப்
  • தேன் - சுவைக்கேற்ப
செய்முறை

முதலில் தைம் மூலிகையை நீரில் கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, நீரை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.

பின் அதை இறக்கி வடிகட்டி, ஓரளவு வெதுவெதுப்பான பின் சுவைக்கு தேன் கலந்து குடிக்க வேண்டும்.

தினமும் தைம் டீயைக் குடிப்பது மிகவும் நல்லது. அதிலும் காலையில் பால் டீ அல்லது காபி குடிப்பதற்கு பதிலாக, தைம் டீ குடித்து வந்தால், உடல் பிரச்சனைகள் நீங்கி மிகச்சிறப்பான பலன் கிடைக்கும்.

தைம் டீ குடிப்பதால் கிடைக்கும் வேறு நன்மைகளைக் காண்போம்

  • தைம் டீயில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. ஆகவே இந்த டீயை உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் குடித்து வந்தால், இரத்த அழுத்தம் சீராகும்.
  • இரத்த சோகை உள்ளவர்கள் தைம் டீ குடியுங்கள். இதனால் அது உடலில் சிவப்பு இரத்த செல்களின் உருவாக்கத்திற்கு உதவி, எளிதில் இரத்த சோகையில் இருந்து விடுவிக்கும்.
  • தைராய்டு பிரச்சனைகளில் இருந்து தைம் டீ விடுவிக்கும். தைம்மில் உள்ள மருத்துவ குணங்கள், தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தியை சீராக்கி, தைராய்டு குறைபாட்டைத் தடுக்கும்.
  • தைம் மூலிகையில் கால்சியம் ஏராளமான அளவில் உள்ளது. இதனால் தைம் டீ குடிக்கும் போது, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான முடக்கு வாதம், கீல்வாதம், மூட்டு வலி போன்றவற்றில் இருந்து விரைவில் விடுபட முடியும்.
  • களைப்பை உணர்வுகள் உள்ளவர்கள் இந்த களைப்பு நீங்கி, உடல் சுறுசுறுப்புடன் இருக்க, காலையில் ஒரு டம்ளர் தைம் டீ குடித்து வாருங்கள். இதனால் நாள் முழுவதும் சிறப்பாக களைப்பின்றி செல்லும்.
  • தொண்டைப்புண் இருக்கும் போது, தைம் டீ குடித்தால், அதில் உள்ள மருத்துவ குணத்தால், தொண்டைப்புண் விரைவில் சரியாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்