இந்த உணவை எல்லாம் மறந்தும் சேர்த்து சாப்பீடாதீங்க! விஷமாக எப்படி மாறுகிறது என்பதை தெரிஞ்சுகோங்க

Report Print Santhan in ஆரோக்கியம்

நாம் உணவை எடுத்துக்கொள்ளும் போது எதனுடன் எதை சேர்த்து சாப்பிட வேண்டும் என்பதை மறந்து சில சமயத்தில் சில தவறுகள் நடக்கும்.

உதாரணத்திற்கு மீன் சாப்பிட்ட உடன் தயிர் சேர்த்து சாப்பிடுவது, தொடர்பே இல்லாமல் ஒரு பக்கம் அசைவ உணவு, மற்றொரு பக்கம் பக்கா சைவம் என ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்வார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு சில உணவு பொருட்களை வேறு ஒரு உணவுடன் சேர்த்து சாப்பிடும் போது நஞ்சாக மாறும், அதில் சிலவற்றை நாம் பார்ப்போம்.

  • வெண்கலப் பாத்திரத்தில் நெய்விட்டு சமைத்தல், பித்தளை செம்பொன் ஆகிய பாத்திரங்களில் தயிர் மோர் வைத்திருந்து உண்டால் நஞ்சாக மாறும்.
  • கோழிக்கறி, பழைய மாமிசம் ஆகியவற்றுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவது நஞ்சாகும்.
  • தேனுடன் தயிர், மாமிசம், கொழுப்பு எண்ணெய் ஆகியவற்றை உண்டால் தவறு. திரிந்த பால், ஊசிப்போன பதார்த்தம், நாறும் உணவு நுரைத்த, உணவு நூல் விட்ட உணவு ஆகியவற்றை உண்டால் கொடிய நோயை உண்டாக்கி உடல் இளைக்க செய்து மரணத்தை கூட தழுவ நேரிடலாம்.
  • ஆட்டு, மாட்டு இறைச்சி உடன் உளுத்தம் பருப்பு, முள்ளங்கி, பால், தேன், துவரம் பருப்பு, முளைகட்டிய பருப்பு வகைகளில் ஏதேனும் ஒன்றோ பலவோ கலந்து சமைத்தாலும், வெல்லம் சேர்த்து கொண்டாலும், அது நஞ்சாக மாறும்.
  • மீன் கறி, கீரை கறி முள்ளங்கி சேர்ந்த சாம்பார் ஆகியவற்றையும் அதிக புளிப்பு சுவையுடைய பழமும், கம்பு, வரகு, கொள்ளு பயறு ஆகியவை தனித்தோ சேர்த்தோ உண்டவுடன் பால் அருந்தினால் அது நஞ்சாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்