நீங்கள் அடிக்கடி வயிற்று பிரச்சனையால் அவதிப்படுறீர்களா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக நம்மில் பலருக்கு அடிக்கடி நமக்கு வயிற்று கோளாறு வருவதுண்டு.

ஏனெனில் குடலில் டாக்ஸின்கள் முழுமையாக நிரம்பியுள்ளதால் உடலில் நோய்களின் தாக்கம் அதிகமாக காணப்படும். அந்தவேளையில் வயிற்று கோளாறுகள் பல உண்டாகுவதுண்டு.

இதற்கு முக்கிய காரணம் நாம் அன்றாட உண்ணும் உணவுகள் முதல் நாம் குடிக்கும் பானங்கள் தான். இது அனைத்திலுமே கிருமிகள் இருப்பதால், அவை குடலை அடைந்து பல தீவிர வயிற்று பிரச்சனைகளை உண்டாக்கி விடுகின்றது.

இந்த பிரச்சினையிலிருந்து விடுபட அவ்வப்போது குடலை சுத்தம் செய்ய வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

குடலை முழுமையாக சுத்தம் செய்வதற்கு இங்கு ஓர் அற்புத பானம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது அதனை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • ஆப்பிள் துண்டுகள் - 1 கோப்பை
  • ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன்
தயாரிக்கும் முறை:

முதலில் ஒரு கோப்பை ஆப்பிளுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

பின்னர் சிறிது எலுமிச்சை சாற்றினை பிழிந்து கொள்ளுங்கள்.

இந்த சாலட்டை தினமும் ஒருமுறை உட்கொள்ளுங்கள். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், குடல் சுத்தமாக இருப்பதோடு, வயிற்று பிரச்சனைகளே வராது.

ஆப்பிளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து, குடலியக்கத்தை சீராக்கி, குடலில் உள்ள டாக்ஸின்களை மலக்குடல் நோக்கி தள்ளி, உடலில் இருந்து வெளியேற்றும்.

ஆலிவ் ஆயில் குடலில் உள்ள அழுக்குகள் மற்றும் கழிவுகளை எளிதில் நகரச் செய்து, சிரமமின்றி உடலில் இருந்து வெளியேற்ற பெரிதும் உதவியாக இருக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்