ஓயாத இருமலை நிரந்தரமாக விரட்டனுமா? இதை மட்டும் செய்திடுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

மழைக்காலம் வந்துவிட்டாலே காய்ச்சல், தடுமல், இருமல் இவை மூன்றுமே சேர்ந்து வந்து விடுகின்றது.

இருமல் என்பது நுரையீரல், பெரிய காற்றுக்குழாய்கள் மற்றும் தொண்டை ஆகியவற்றிலிருந்து சளியை அல்லது உறுத்தும் துணிக்கைகளை அகற்றுவதற்காக உடலினால் ஏற்படுத்தப்படும் சத்தமும் அசைவுமாகும்.

இருமல் மூச்சுயிர்ப்பு வழித்தடத்தில் உள்ள பாய்மங்கள், எரிச்சலூட்டிகள், அயற்பொருட்கள், நுண்ணுயிரிகளை அகற்ற உதவுகிறது.

சாதாரண தடிமல் போன்ற ஒரு வைரஸால் ஏற்படும் சுவாசத்திற்குரிய தொற்று நோயே இருமலுக்கான மிகப் பொதுவான காரணமாக அமைகின்றது.

இந்த பிரச்சினையிலிருந்து விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை வைத்திய முறைகளை பார்ப்போம்.

தேவையானவை
  • பால்- 1 டம்ளர்
  • தேன் - 1 டேபிள் ஸ்பூன்
  • முட்டை மஞ்சள் கரு - 1
செய்முறை

முதலில் நன்றாக பாலை சூடுபடுத்தி கொள்ளுங்கள். பின் நன்றாக பொங்கும்போது முட்டையின் மஞ்சள் கருவை போடவும்.

சில நிமிடங்களுக்கு கலக்கவும். பின்னர் அடுப்பை அணைத்திடுங்கள்.

பால் வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும் அதில் தேன் கலந்து பருகுங்கள். தினமும் இரவு உணவு முடிந்ததும் இந்த பாலை குடிக்க வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்